அந்தோ பரிதாபம்.. இந்த போட்டோவை பாருங்க.. இலங்கையில் ராஜபக்சே குடும்பத்திற்கு இப்படியொரு நிலையா!
கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு இடையே முக்கியமான புகைப்படம் வைரலாகி வருகிறது.
இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு நிலவி வருகிறது. அங்கு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு 321.14 ஆக சரிந்துள்ளது. அதோடு இலங்கையின் டாலர் கையிருப்பு கிட்டத்தட்ட காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் அமைச்சரவை மொத்தமாக அங்கு ராஜினாமா செய்துள்ளது. அதேபோல் அதிபர் கோத்தபய ராஜபக்சே இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் போராட்டம்
நேற்று வீடியோ மூலம் மக்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் மகிந்த ராஜபக்சே மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இது எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டம். போராட்டம் காரணமாகவே இலங்கையின் பொருளாதாரம் சரிந்துள்ளது என்று குறிப்பிட்டார். போராட்டத்தை நிறுத்த என்னதான் மகிந்த ராஜபக்சே சமாதானம் செய்தாலும் மக்கள் அங்கு போராட்டத்தை நிறுத்துவதாக இல்லை. கிட்டத்தட்ட மெரினா போராட்டம் போல ஒவ்வொரு ஏரியாவிலும் மக்கள் பல நூற்றுக்கணக்கில் குவிந்து போராட்டம் செய்து வருகின்றனர்.

ஒரே கோரிக்கை
அதிலும் அங்கு அதிபர் அலுவலகம் முன்பு இரவு, பகல் பாராமல் மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அங்கேயே டென்ட் போட்டு, அங்கேயே சமைத்து, குளிப்பதற்கு மட்டும் வீட்டிற்கு சென்று போராட்டம் செய்து வருகின்றனர். அமைதியான முறையில், வன்முறை இன்றி.. பாட்டு பாடி, ஆட்டம் ஆடி கோஷம் எழுப்பி, போராட்டம் செய்து வருகின்றனர். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என்று குடும்பம் குடும்பமாக போராட்டம் செய்து கொண்டு இருக்கின்றனர். இரண்டு நாட்களாக பெய்த மழையை கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை.

மழை
கடும் மழையிலும் குடையை பிடித்தபடி அங்கு மக்கள் போராட்டம் செய்து கொண்டு இருக்கின்றனர். இரண்டு வார போராட்டம், அங்கு உச்சத்தை தொட்டுள்ளது. கோட்டா கோ என்ற கோஷம் விண்ணை பிளந்து கொண்டு இருக்கிறது. பல balle வகை பாடல்களை ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராகவும் மக்கள் பாடி வருகிறார்கள். இதன் ஒரு பக்கமாக அங்கு போராட்டம் நடக்கும் இடத்திற்கு கோ கோகம என்றும் பெயர் மாற்றி உள்ளனர். ராஜபக்சேக்கள் வேஷத்தில் மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்.

மக்கள் இணைந்து போராட்டம்
இதில் ஒரு புகைப்படம் இப்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அதன்படி மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே இருவரின் புகைப்படமும் அடங்கிய குப்பை தொட்டிகள் போராட்ட களம் முழுக்க வைக்கப்பட்டு உள்ளது. அதாவது குப்பை தொட்டிகளில் இவர்களின் புகைப்படத்தை வைத்து அதை பல இடங்களில் வைத்துள்ளனர். இதை வைத்தது தமிழர்கள் அல்ல.. சிங்களர்கள்தான்.

மக்கள் புரட்சி
இனவாதம் பேசி.. தமிழர்களை ஒதுக்கி.. தமிழர்களின் ஆதரவு இல்லாமல் .. சிங்களர்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்தது ராஜபக்சே குடும்பம். அதே ராஜபக்சே குடும்பத்தை பெரும்பான்மை சிங்களர்கள்.. சிறுபான்மை தமிழர்களோடு சேர்ந்து எதிர்க்க தொடங்கி உள்ளனர். மக்கள் இடையே இருந்த இன வேறுபாடுகள் எல்லாம் ஒடுங்கி.. மக்கள் ஒரு குடையின் கீழ் திரண்டு அங்கு ராஜபக்சே குடும்பத்தை எதிர்க்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications