இலங்கை அதிபர் வீடு முற்றுகை.. கண்ணீர் புகை குண்டு வீச்சு.. 5 போலீசார் காயம், 45 பேர் கைது
கொழும்பு: இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடி நிலவுவதை கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டம் வன்முறையானது. போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். வன்முறையில் 5 போலீசார் காயமடைந்தனர். இதுதொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரையில் இலங்கை சந்தித்ததில் மோசமான பிரச்சனை இதுவாகும்.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளன. உணவு பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலை ரூ.200யை தாண்டியுள்ளன.

பொதுமக்கள் போராட்டம்
மேலும் தலைநகர் கொழும்பு உள்பட பல நகரங்களில் 15 மணிநேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர். பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் இலங்கையில் ஆளும் அரசை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் வீடு முற்றுகை
நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டு முன்பு பொதுமக்கள் கூடி தன்னெழுச்சியாக போராடினர். வீட்டை அவர்கள் முற்றுகையிட்டு ராஜபக்சேவின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறி செல்லும்படி அவர்கள் கோஷமிட்டனர். இந்த போராட்டம் எல்லை மீறி சென்றது. இதனால் போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

வாகனங்கள் தீவைப்பு - 45 பேர் கைது
இந்த வேளையில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் போலீசார், ராணுவத்தினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இந்நிலையில், மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‛‛போராட்டக்காரர்களால் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் ஐந்து போலீசார் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்'' என்றனர்.

ஊரடங்கு தளர்வு
இந்த போராட்டத்தையொட்டி கொழும்பு வடக்கு, தெற்கு, கொழும்பு மத்திய, நுகேகொடா, கல்கிசை மற்றும் களனி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொழும்பின் பல பகுதிகளில் விதிக்கப்பட்ட இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5 மணியளவில் தளர்த்தப்பட்டது. இருப்பினும் இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட பல இடங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications