திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சிக்கு ஒரே ஒரு இடம்தான்- ஓங்கியது ஜேவிபி அணி கை!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சிக்கு மொத்தம் உள்ள 4 இடங்களில் ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது. ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி 2 இடங்களைக் கைப்பற்றியது.
ஈழத் தமிழர்களின் கனவு நாடான தமிழீழத்தின் தலைநகராக போற்றப்படுவது திருகோணமலை. இந்த மாவட்டத்தில் சேருவில, திருகோணமலை, மூதூர் ஆகிய தேர்தல் மாவட்டங்கள் உள்ளன.

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் விவரம்:
தபால் வாக்குகள்: தேசிய மக்கள் சக்தி 9,705; ஐக்கிய மக்கள் சக்தி 2,853; இலங்கை தமிழரசு கட்சி 1,749; புதிய ஜனநாயக முன்னணி- 392; ஜனநாயக தேசிய கூட்டணி 249

சேருவில முடிவுகள்: தேசிய மக்கள் சக்தி 27,702; ஐக்கிய மக்கள் சக்தி 9,581; இலங்கை தமிழரசு கட்சி 5,543
திருகோணமலை முடிவுகள்: தேசிய மக்கள் சக்தி 25,479; ஐக்கிய மக்கள் சக்தி 11,191; இலங்கை தமிழரசு கட்சி 18,461
மூதூர் முடிவுகள்: திருகோணமலை முடிவுகள்: தேசிய மக்கள் சக்தி 24,145; ஐக்கிய மக்கள் சக்தி 29,433; இலங்கை தமிழரசு கட்சி 8,415
இறுதி முடிவுகள்: திருகோணமலை மாவட்டத்தின் மொத்தம் 4 இடங்களில் தேசிய மக்கள் சக்திக்கு 2; ஐக்கிய மக்கள் சக்திக்கு 1; இலங்கை தமிழரசு கட்சிக்கு 1 இடம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications