10ம் வகுப்பு மாணவி.. சிதைத்த 4 காம கொடூரர்கள்! ஏன் யாருமே கண்டிக்கல? - வேல்முருகன் வேதனை
கடலூர்: திட்டக்குடி அருகே பள்ளி மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பட்டூர் கிராமத்தை சேர்ந்த சமுதாய மாணவி ஒருவர், ஆவினங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், கொடிக்களம் தோப்பு காலனியை சேர்ந்த மாணவர்கள் சிவசக்தி, மணிகண்டன், ராஜேஷ் ஆகியோர் பள்ளி முடிந்ததும் மாணவியை பின்தொடர்ந்து, அம்மாணவியின் வீட்டிற்கே சென்றுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
அப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்துக்கொண்ட அந்த 3 காமக் கொடூரன்களும், வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு, அம்மாணவியை எட்டி உதைத்துள்ளனர். பின்னர் அரை மயக்கத்தில் கிடந்த அம்மாணவியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்த அந்த காமக் கொடூரன்கள், அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தொடர்ந்து, அந்த வீடியோவை 3 காமக் கொடூரன்களும், சக மாணவர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்சப் - பில் அனுப்பி வைத்துள்ளனர்.

4 மாணவர்கள் கைது
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அம்மாணவி தனது தாயிடம் கூற, அவர் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து, இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலையிட்டதை அடுத்து, மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவு செய்த 3 காமக் கொடூரன்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த மற்றொரு மாணவன் ஆகிய 4 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

வேதனை
இவர்கள் மீது மாணவியைப் பலவந்தமாக பாலியல் வல்லுறவு செய்தது, கொலைமிரட்டல் விடுத்தது, இதற்கு உடந்தையாக இருந்தது என 4 போக்சோ வழக்கும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழும் மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரம் குறித்து சில அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும், பெண்களுக்கான அமைப்புகளும் குரல் கொடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

ஆணாதிக்க சிந்தனை
பாதிக்கப்பட்டவர்கள் யாராயினும், வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டியது முக்கியமானது. இதில் சாதியோ, மதமோ, கட்சியோ முக்கியம் அல்ல. காமவெறி நிரம்பி வழியும் இந்த ஆணாதிக்க சிந்தனைதான் பெண்களை ரத்தமும் சதையும் கொண்ட எல்லா உணர்வுகள் உள்ள சக மனுசியாக மதிக்காமல், பெண் என்றாலே அனுபவிக்கக் கூடியவள் என்ற மனநிலையை உருவாக்கும் அபாய வேர். பாலியல் வன்முறை குற்றங்களுக்கான அவசரச் சட்டம் வந்த பிறகும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்து விட்டதா என்றால் இல்லை.

வீடியோக்களை நீக்க வேண்டும்
எனவே, கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு, உரிய சிகிச்சை அளிப்பதோடு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாணவியின் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும். கூட்டு பாலியல் வன்கொடுமையில் தொடர்புள்ள 4 காமக் கொடூரன்களுக்கும், பிணையில் வர முடியாத தண்டனை வழங்க வேண்டும். வாட்சப்-பில் யார் யாருக்கு வீடியோ அனுப்பப்பட்டது என்பதை கண்டறிந்து, அவ்வீடியோவை நீக்குவதோடு, அதனை பகிர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

ஆபாச இணையதளங்கள்
அதுமட்டுமின்றி, பெண்களை கவர்ச்சியாக, சோரம் போகக் கூடியவளாக, பால்உணர்வைத் தூண்டக் கூடியவளாக காட்டும் ஆபாச இணையதளங்கள், டிவி சீரியல்கள், சினிமாக்கள், விளம்பரங்களை தடை செய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ரூபாய் 1 லட்சம் கல்வி உதவி தொகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications