Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தியேட்டர் பாத்ரூமில்.. உன் மனைவியை வீடியோ எடுத்துட்டோம்.. நாசகார நால்வர் கும்பல்.. கூண்டோடு கைது!

கர்ப்பிணியை பலாத்காரம் செய்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: " "உன் பொண்டாட்டியை பாத்ரூமில் வைத்து வீடியோ எடுத்துவிட்டோம்.. படம் முடிந்ததும் எங்ககூட அவளை அனுப்பி வைக்கணும்.." என்று மிரட்டிய 4 இளைஞர்கள், 5 மாத கர்ப்பிணியை கடத்தி காட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.. இது சம்பந்தமாக 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் புதுப்பாளையம் பகுதியில் கணவனுடன் வசித்து வருகிறார் 21 வயது இளம்பெண்.. இவர்களுக்கு கல்யாணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இப்போது இந்த பெண் திரும்பவும் 5 மாத கர்ப்பமாக இருக்கிறார்.

சம்பவத்தன்று கணவனும், மனைவியும் கடலூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு நைட் ஷோ சென்றுள்ளனர்.. படம் முடிந்து இடைவேளியின்போது, கர்ப்பிணி பெண் பாத்ரூம் சென்றுள்ளார்.

பாத்ரூம்

பாத்ரூம்

சிறிது நேரம் கழித்து, 4 பேர் பெண்ணின் கணவரை தனியாக அழைத்து சென்று.. "உன் பொண்டாட்டியை பாத்ரூமில் வைத்து வீடியோ எடுத்துவிட்டோம்.. படம் முடிந்ததும் எங்ககூட அவளை அனுப்பி வைக்கணும்.. இல்லையென்றால், அந்த வீடியோவை சோஷியில் மீடியாவில் போட்டுவிடுவோம்" என்று மிரட்டி உள்ளனர்.

கடத்தல்

கடத்தல்

அப்படி அனுப்பவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்றும் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி உள்ளனர்.. படம் முடிந்ததும் கணவனும் மனைவியும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.. அப்போது அந்த 4 பேருமே காரில் பின்னாடியே வந்தனர். கணவனை தாக்கிவிட்டு, கர்ப்பிணி பெண்ணை அந்த காரில் கடத்தி சென்றனர்..

காட்டுப்பகுதி

காட்டுப்பகுதி

கம்மியம்பேட்டையில் உள்ள காட்டுப்பகுதியை நோக்கி பறந்தது.. அந்த காட்டில் 4 பேரும் கர்ப்பிணியை மாறி மாறி சீரழித்துள்ளனர். திரும்பவும் அந்த பெண்ணை காரிலேயே கொண்டு வந்து வீட்டு பக்கத்தில் விட்டு விட்டு சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட புதுநகர் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மாவட்ட எஸ்பி அபிநவிடம் சந்தித்து மனு அளித்தனர்.

பலாத்காரம்

பலாத்காரம்

அதில், "சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமான புகார் பெறவில்லை... கடத்தல், கொலை மிரட்டல், கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்ததாக புகார் மனுவில் முழுமையாக தொகுத்து எழுதாமல் திட்டமிட்டு பாலியல் துன்புறுத்தல் என்று பொருள்படும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.. எனவே, 4 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை வேண்டும்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் உதவி, பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்திந்தார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

இந்நிலையில், பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி, பிரபாகரன் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் சம்பந்தப்பட்ட பெண்ணை எப்போதோ கேலி செய்ததாக சொல்லப்படுகிறது. அதனால், இவர், செருப்பை கழட்டி அவர்களிடம் காட்டி மிரட்டி இருக்கிறார். இந்த ஆத்திரத்தில்தான், 4 பேரும் பெண்ணை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கணவனை தாக்கிவிட்டு, கர்ப்பிணியை காட்டுக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+