பழனிவேலு பாட்ட கேட்டு.. விருத்தாசலம் போலீஸ் ஸ்டேசனே சோகமாச்சு.. அந்த பாட்டில் என்ன ஒரு வலி!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் 5 வருடம் முன்பு காணாமல் போன தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்த பழனிவேல் என்ற பாடகர், அவரை நினைத்து, போலீஸ் ஸ்டேசன் முன்பு மைக் செட்டில் பாட்டு பாடினார்.

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அப்படிப்பட்ட மனைவி சில நாட்கள் அம்மா வீட்டிற்கு போனால் பலரும் கொண்டாடி தீர்ப்பார்கள். ஆனால் அதே மனைவி நிரந்தரமாக தன்னை வீட்டு போனால் அவர்களால் அதை தாங்கி கொள்ளவே முடியாது.

A singer named Palanivel, sang a song on the mic set in front of Virudhachalam police station

மனைவியை வைத்து பல கேலி சித்திர மீம்ஸ்கள் வந்திருக்கும். ஆனால் அதே மனைவி இல்லாமல் போனால் அவர்கள் எந்த அளவிற்கு வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பார்கள் என்பது குறித்து தத்துவங்கள் மீம்ஸை விட அதிகமாகவே வந்துள்ளது மனைவி தன்னை விட்டுவிட்டு சென்றால் கணவனுக்கு ஏற்படும் வலியை ஒருவர் மைக்கில் பாடி அசர வைத்தார்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல். இவர் ஊர் ஊராக பாட்டு பாடி வருகிறார் . இவரது மனைவி பழனியம்மாள். பழனியம்மாள் 5 வருடத்திற்கு முன்னர் காணாமல் போய்விட்டார். பழனியம்மாள் எங்கு போனார் என்றே பழனிவேலுக்கு தெரியவில்லை.

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதனால் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பழனிவேல் தனது மனைவி காணாமல் போனது குறித்து புகார் அளித்திருக்கிறார்.

ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லை பிறகு வாருங்கள் என கூறி என்னை அனுப்பி வைத்துள்ளார்களாம். இந்நிலையில் 5 ஆண்டுகள் ஆகியும் அவரது மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் சோகமான பழனிவேல் விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு மைக் மற்றும் ஸ்பீக்கருடன் அமர்ந்து பாட்டு பாடினார். போலீசாருக்கு தனது கஷ்டத்தை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இளங்காற்று வீசுதே, என் ஜீவன் பாடுது, ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு உள்ளிட்ட சோக பாடல்களை பாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+