சிதம்பரத்தில் படித்த போது உல்லாசம்.. வீடியோவால் வில்லங்கம்.. பேராசிரியர் மீது நாமக்கல் பெண் புகார்
கடலூர்: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது பெண், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 8 வருடம் முன்பு படித்தார். அப்போது மாணவியுடன் நெருக்கமாக பழகிய உதவி பேராசிரியர் அடிக்கடி உல்லாசமாக இருந்தாராம். அந்த வீடியாவை காட்டி இப்போது மிரட்டுவதாக பேராசிரியை மீது நாமக்கல் மாணவி புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதாகும் மாணவி ஒருவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படித்து வந்துள்ளார். அந்த மாணவி நேற்று சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மாணவி கூறுகையில், நான் சிதம்பரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து பி.எச்.டி. படித்து வந்தேன். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நோயியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த ராஜா என்பவர், என்னுடன் பலமுறை உல்லாசத்தில் ஈடுபட்டார். அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோவை வைத்து என்னை மிரட்டி வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் ராஜா மீது சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மீது கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளியில் ஆசிரியருக்கு நடந்த சம்பவம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மாராயமுட்டம் பகுதியை சேர்ந்த வினோதினிக்கு 49 வயதுஆகிறது. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். வினோதினி களியக்காவிளை அருகே உள்ள பாறசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆனாவூர் அரசு பள்ளியில் கேரள கல்வித்துறையின் சிறப்பு திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் வினோதினி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்டு அங்கிருந்த சக ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியை வினோதினி பரிதாபமாக இறந்தார். வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது ஆசிரியை மயங்கி விழுந்து இறந்த சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications