சிதம்பரத்தில் அடுத்த ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு.. என்ன காரணம் தெரியுமா.. பரபர தகவல்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் அனுமதி கோரி பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சிதம்பரத்தில் அடுத்து ஒரு மாதத்திற்கு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் முக்கிய விஐபிக்களுக்கு மட்டுமே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய சிதம்பரம் தீட்சிதர்கள் தடை விதித்தனர்.

போராட்டம்
இதற்கு அனுமதி அளிக்கக் கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே சமீபத்தில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய சென்ற பெண்ணை சாதிப்பெயரை சொல்லி திட்டியாக சர்ச்சை எழுந்தது. அப்பெண் அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்ந்து பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது.

தடை
இதற்கிடையே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்ககோரி பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தச் சூழலில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அடுத்த ஒரு மாதத்திற்கு அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர போராட்ட குழுவினர் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு
இது தொடர்பாக சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில், "கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் மற்றும் நகரம், ஸ்ரீ சபாநாயகர் திருக்கோயிலில், கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக் குழுவினரால், தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பல்வேறு நீதிமன்ற ஆணைகள் மற்றும் அரசாணைகளைத் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்நிகழ்வு தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பேரில் இறுதி முடிவு எடுக்கும்பொருட்டு, பல்வேறு நிலையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

144 தடை உத்தரவு
எனவே, அரசின் முடிவினை எதிர்நோக்கி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர பல்வேறு போராட்ட குழுவினர்கள் அரசின் முடிவு வரும் விரைவில் எவ்வித போராட்டங்களோ, ஆர்பாட்டங்களோ, கூட்டமாகக் கூடி ஆலோசனை மேற்கொள்ளுதலோ ஒரு மாத காலத்திற்கு செய்தல் கூடாது என இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144- ன் படி தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வுத்திரவு முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications