கொடி மரத்தை நெருங்கவிடாமல் தடுப்புகளை வைத்த தீட்சிதர்கள்.. சிதம்பரம் கோவிலில் என்ன நடக்கிறது?
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடிமரத்தை சுற்றி தீட்சிதர்கள் தடுப்புகளை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அறநிலையத்துறை அதிகாரிகள் கொடிமரத்தை நெருங்கவிடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற பெற்ற நடராஜர் கோயில் வளாகத்துக்குள் நடராஜர் சன்னதி அருகே தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்று தொடர் கோரிக்கை எழுந்து வந்தது. . நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தாலும், தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி பகுதியில் கொடிமரம் அமைந்துள்ளது. இந்த கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில் மழையால் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. அதை மாற்றி அமைப்பதற்கு கோவிந்தராஜ பெருமாள் சன்னதி நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பழைய கொடி மரத்திற்கு பாலாலயம் செய்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள் கொடி மரத்திற்கு பாலாலயம் செய்தனர்.
அப்போது அங்கிருந்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு கோயில் கொடி மரத்தை மாற்றக்கூடாது. பிரமோற்சவம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, அதனால் எந்தப் பணியும் செய்யக்கூடாது என்று கூறி கொடி மரத்தை சுற்றி நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவித்து பட்டாச்சாரியார்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், துணை ஆணையர் சந்திரன் மற்றும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தை மாற்றுவதற்காக வந்தனர்.
அதற்கு நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளை சூழ்ந்து எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து தீட்சிதர்கள் கொடி மரத்தை மாற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து சிதம்பரம் டிஎஸ்பி அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் தலைமையில் சிதம்பரம் நடராஜர் கோயில் வாலா பகுதி முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அறநிலையத்துறை அதிகாரிகள், கொடி மரத்தை நெருங்க விடாமல், கொடி மரத்துக்கு செல்லும் வழியில் தீட்சிதர்கள் தடுப்புகளை வைத்தனர். இதனால் தீட்சிதர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பின்னர் சிறிது நேரத்தில் தீட்சிதர்களே தடுப்புகளை அகற்றினர்.
தற்போதுள்ள கொடிமரம் போலவே வைக்க வேண்டும் என்றும் மாற்றம் செய்ய மாட்டோம் என எழுத்துப்பூர்வ கடிதம் தரவேண்டும் என்றும் தீட்சிதர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவிலின் நடை சாத்தப்பட்டதால் பிரதான வாயில் மூடப்பட்டது.
கொடிமரம் தொடர்பான வழக்கு விசாரணை சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்ற முடிவை தெரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிடுவதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் டிரஸ்டிகள், போலீசார் காத்திருந்து வருகின்றனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications