Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூருக்கு "இடி".. ஊரெல்லாம் "அகிலா மேடம்" பேச்சுதான்.. ரொம்ப அசிங்கமா சிக்கிட்டாங்க.. மானமே போச்சு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் முழுக்க அகிலா மேடம் பற்றின பேச்சுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.. இவர் ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர்.. இவர் என்ன செய்தார்? போலீசாரிடம் எப்படி சிக்கினார்?
கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ரமா, கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராமிடம், திடீரென ஒரு புகார் மனுவை தந்துள்ளார்..

முதலமைச்சர்: அதில், "திட்டக்குடி வட்டம் எறையூரை சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி பத்மினி மற்றும் பெண்ணாடத்தை சேர்ந்த மணி மனைவி தேவகி ஆகியோர் தங்களது கணவரின் இறப்பிற்காக, முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை வேண்டி திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

Cuddalore Incident and woman employee arrest for nearly Rs 7 crore cheating case in Thittakudi

சுமார் 6 மாதத்திற்கு மேல் ஆகியும் அவர்களுக்கு எவ்வித நிவாரண தொகையும் வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து கடலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்

கலெக்டர் உத்தரவு: அதன்பேரில், பத்மினி மற்றும் தேவகி ஆகியோரின் ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்களை பெற்று, ஆய்வு செய்தபோது மேற்படி நபர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்னரே உதவித்தொகை அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவந்தது.
இதுகுறித்து 2020ம் ஆண்டு முதல் அனுப்பப்பட்ட முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரணத்தொகை வழங்கப்பட்ட பட்டியல்களை ஆராய்ந்தும், கடலூர் மாவட்ட கருவூல் அலுவலரிடமிருந்து வரப்பெற்ற ஆவணங்களையும் பரிசீலனை செய்ததில், விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கு எண்ணிற்கு நிவாரணத்தொகை அனுப்பப்படவில்லை என்பதும், பயனாளிகள் அல்லாத வேறு நபர்களுக்கு பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பலமுறை நிவாரண தொகை மற்றும் உதவித்தொகை அனுப்பப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்தது.

வங்கிக்கணக்கு: அதன்படி, வங்கிக்கணக்கு பயனாளி அல்லாத வேறு நபர்களான வினோத்குமார், மணிவண்ணன், பாலகிருஷ்ணன், விஜயா, செல்வராஜ், வளர்மதி, முத்துசாமி, விஜயன் ஆகியோர் பெயரில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த அகிலா என்பவர் மூலம் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அகிலா, தன்னுடைய உறவினர்களின் பெயர்களில் மோசடியாக பணப்பரிமாற்றம் செய்து, அரசு பணத்தை அபகரித்து கையாடல் செய்துள்ளார். மொத்தம் ரூ.6.75 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. எனவே அகிலா மற்றும் அவருடன் இக்குற்றத்தில் தொடர்புடைய நபர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

குற்றவாளிகள்: இதையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டார். போலீசாரும், இந்த வழக்கில் திட்டக்குடியை சேர்ந்த வினோத்குமார் மனைவி அகிலா 30, வினோத்குமார் 29, மேல் ஐவனுரை சேர்ந்த சாத்தப்பன் மகன் பாலகிருஷ்ணன் 30, திட்டக்குடியை சேர்ந்த சுப்ரமணி மகன் மணிவண்ணன் 58, அன்புக்கரசன் மனைவி விஜயா 48, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2 கார்கள், ஒரு சரக்கு வாகனம், 6 பவுன் நகைகள், ரூ.68,500 பணம் மற்றும் 4 சொத்து பத்திரங்களின் நகல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.

கம்ப்யூட்டர் ஆபரேட்டர்: கடந்த 2017-ம் ஆண்டிலேயே, இந்த திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்ததாம்.. கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்கிறார்கள்.. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக, அகிலா திகழ்ந்து வந்திருக்கிறார்.. இந்த திட்டத்தின் கணினி பிரிவில், 10 வருடங்களாக பணியாற்றியவர்தான் அகிலா.. இத்தனைக்கும் இவர் ஒப்பந்த அடிப்படையில்தான் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை, திருமணம், ஈமச்சடங்கு, விவசாயிகளுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. இப்படியான உதவித்தொகைகள், அந்தந்த பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும்.

பயனாளிகள்: ஆனால், அதை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு அனுப்பாமல், தன்னுடைய சொந்தக்காரரின் வங்கிக் கணக்குக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்து வந்திருக்கிறார் அகிலா.. அகிலா, 4-க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் இந்த பணத்தை டிரான்ஸ்பர் செய்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்..

இந்த புகார் எழுந்த காலத்திலேயே, திட்டக்குடி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியாற்றி, இப்போது திட்டக்குடி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் டிரான்ஸ்பரும் செய்யப்பட்டிருக்கிறார்.

Cuddalore Incident and woman employee arrest for nearly Rs 7 crore cheating case in Thittakudi

5 பேர் கைது: இந்த நிலையில்தான், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தும்படி கடலூர் ஆர்டிஓ அதியமான் கவியரசுக்கு உத்தரவிட்டார் கலெக்டர் அருண் தம்புராஜ்.. அதன்படியே அகிலா சிக்கி உள்ளார்.. தற்போது அகிலா கைதாகி உள்ள நிலையில், கிடுக்கிப்பிடி விசாரணை அவரிடம் நடக்கிறது.. ஆனால், இந்த பணம் கையாடலை, தன்னிச்சையாகச் செய்தாரா அல்லது வேறு அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது..

தற்போது, அகிலாவின் மொத்த சொந்தக்காரர்களும், போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வந்திருக்கிறார்கள். இப்போது விஷயம் என்னவென்றால், இந்த விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலையிட்டுள்ளது..

பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் வாங்கி அகிலா குவித்துள்ளதாகவும், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

விசாரணை: பணம் கையாடல் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஆவேசமாக முழக்கமிட்டார்கள்.. அதற்கு பிறகுதான், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அகிலாவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றார்களாம்.. இப்போதே 7 கோடி ரூபாய் மோசடி என்று அகிலா மீது புகார் வந்துள்ள நிலையில், போலீசார் தங்கள் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர். அநேகமாக இதில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+