என்.எல்.சி. கொதிகலன் வெடித்து விபத்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், மேலும் ஒரு ஒப்பந்த தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

Death toll rises to 5 in Neyveli NLC fire

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள அனல்மின் நிலையங்களில் ஒன்றான, இரண்டாம் அனல் மின் நிலையத்தில், உள்ள 6-வது உற்பத்திப் பிரிவின் கொதிகலன் அமைப்பின் ஒரு பகுதியில் கடந்த 7-ஆம் தேதி மாலை திடீரென கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Death toll rises to 5 in Neyveli NLC fire

இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன், ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன், பாலமுருகன் ஆகிய 8 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

Death toll rises to 5 in Neyveli NLC fire

இதில் நிரந்தர ஊழியர்கள் சர்புதீன், பாவாடை மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், பாலமுருகன் ஆகிய 4 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒப்பந்த தொழிலாளி அன்புராஜன் (47) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் என்.எல்.சி. தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Death toll rises to 5 in Neyveli NLC fire
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+