Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறப்பு சான்றிதழ்கள்.. இது ரொம்ப முக்கியம்.. இறப்பு சான்றிதழை பெறக்கூட லஞ்சமா..யாரந்த மாநகராட்சி நபர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: இறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக ஒரு அதிகாரி லஞ்சம் கேட்டிருக்கிறார்.. அதற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா?

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பை குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.. அதுவும், 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும்,

Do you know the importance of Death certificates and what happened in the Cuddalore District Court

இறப்பு சான்றிதழ் என்பது ஒரு நபரின் மரணம், உண்மை மற்றும் இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த அரசாங்கத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க ஆவணமாகும்.

என்ன காரணம்: ஒரு நபரின் இறப்பு நேரத்தையும் தேதியையும் நிரூபிப்பதற்காக இந்த இறப்பு சான்றிதழ் உதவுகிறது.. அதுமட்டுமல்ல, சமூக, சட்ட மற்றும் உத்தியோகபூர்வ பொறுப்புகளிலிருந்து தனிநபரை விடுவிப்பது, சொத்து வாரிசை தீர்ப்பது, குடும்பம் காப்பீடு மற்றும் பிற நன்மைகளை சேகரிப்பதற்காக இந்த இறப்பு சான்றிதழ், பயன்படுகிறது. எனவே, அனைத்து இறப்புகளும் நிகழ்ந்த இடத்தில் 21 நாட்களுக்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்..

வழிமுறைகள்: இந்த சான்றிதழை பெறுவதற்கு, நிறைய வழிமுறைகள் உள்ளன.. கிராம பஞ்சாயத்துகளில் மரணம் ஏற்பட்டால், இறப்புகளை பதிவு செய்யும் பொறுப்பு வருவாய்த்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடமே உள்ளது. ஒரு வீட்டில் மரணம் ஏற்பட்டால், அந்த சம்பவத்தை மருத்துவ சான்றிதழுடன் பதிவு செய்ய செய்தால், இறப்பு நடந்து, அடுத்த 21 நாட்களுக்குள் இறப்பு பதிவாகியிருந்தால், ஆவணங்களை சரிபார்த்தபின்னர் இறப்பு சான்றிதழின் இலவச நகல் வழங்கப்படும்... இதற்கு பிறகுதான் விண்ணப்பிக்கவே முடியும்.

கிராமப்புறங்களில், இறப்புச் சான்றிதழை தாலுகா அலுவலகத்தில், இறந்த 2 வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும், அதன் பிறகு, துணை பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். டவுன்/முனிசிபல் பகுதிகளில், அந்தந்த டவுன்/முனிசிபல் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இறப்பு சான்றிதழ்கள்: எனினும், இந்த இறப்பு சான்றிதழ்களை வழங்குவதில்கூட, சில அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக தெரிகிறது.. ஒருவேளை, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது புகார்கள் நிரூபிக்கப்பட்டால், துறைரீதியான நடவடிக்கையும் உடனடியாக எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படித்தான், கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் என்பவர், தன்னுடைய உறவினர் தண்டபாணி என்பவரின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக, கடந்த 2016ம் ஆண்டு கடலுார் நகராட்சி (தற்போது மாநகராட்சி) அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.. அப்போது, இளநிலை உதவியாளராக பணிபுரிந்த ராமன் என்பவர், இறப்பு சான்றிதழ் வழங்க 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்..

இது குறித்து குணசேகரன், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கவும், போலீசாரின் அறிவுரைப்படி, அக்டோபர் 27ம் தேதி, நகராட்சி அலுவலகத்தில் ராமனிடம், குணசேகரன் 3,000 ரூபாய் லஞ்சம் தந்தார்..

சிறைத்தண்டனை: அப்போது, மறைந்திருந்த போலீசார், ராமனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்துவந்த நிலையில், இப்போது, விசாரணை முடிந்து, நீதிபதி பிரபாகர் நேற்று தீர்ப்பையும் தந்துள்ளர். அதன்படி, குற்றவாளி ராமனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+