கடலூர் அருகே கணவருடன் உல்லாசமாக இருந்த அக்கா.. கையும் களவுமாக பிடித்த தங்கை.. ஆடிப்போன ஊர் மக்கள்
கடலூர்: கள்ளக்காதல் விவகாரங்கள் குடும்பத்திலும் சரி, உறவிலும் சரி பெரிய சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. கணவணை இழந்த பெண் அல்லது மனைவியை இழந்த கணவன் ஆகியோரில் சிலர், சில நேரங்களில் சபலத்தில் திருமணத்தை மீறிய உறவு வைத்து கொள்கிறார்கள். அதன் விளைவுகள் பெரும்பாலும் கற்பனையிலும் நினைத்துபார்க்க முடியாத சம்பவத்தை நிகழ்த்தி விடுகிறது. கடலுர் அருகே கணவருடன் உல்லாசமாக இருந்த அக்காளை பெண் என்ன செய்தார் தெரியுமா? ஆத்திரப்பட்டதால் இந்த விவகாரத்தில் அவரது இரண்டு மகன்களும் கைதாகி உள்ளனர்.
திருமணத்தை மீறிய உறவில் சிக்கும் பெண்கள், தனது சொந்த அக்காள் கணவரை அல்லது சொந்த தங்கை கணவரை தனது பக்கம் வளைத்துக் கொள்வது எங்காவது ஒரு சில இடங்களில் நடக்கிறது. கணவனை இழந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக ஆரம்பிக்கும் இந்த உறவு சில நேரங்களில் கள்ளக்காதலாக முடிந்துவிடுகிறது. கணவனை இழந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக செல்லும் சிலர் அவர்களுக்கு உதவி செய்து நெருக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். கடைசியில் மனைவிக்கு தெரியமால் திருமணத்தை மீறிய உறவில் சிக்கி கொள்கிறார்கள். அந்த பெண்களும் தனக்கு ஒரு துணை கிடைத்துவிட்டதால் அதை கைவிட மறுத்துவிடுகிறார்கள். இறுதியில் அது பெரிய சிக்கலை ஏற்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதாகும் பெண் ஒருவரின் கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தை இல்லாத நிலையில் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.
இவருடைய தங்கை புவனகிரி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தனது கணவர் மற்றும் 17, 15 வயது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். இதில் ஒரு மகன் 10-ம் வகுப்பும், மற்றொரு மகன் 12-ம் வகுப்பும் அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
கணவரை இழந்து தனிமையில் தவித்த அக்காளுக்கு தங்கையின் கணவர் அவ்வப்போது சிறு, சிறு உதவிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து பழகி வந்திருக்கிறார்கள், நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி அன்று மாலை கள்ளக்காதலி வீட்டிற்கு தங்கையின் கணவர் சென்றார். அங்கு அவருடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் தங்கையும், மணிலா அறுவடைக்கு மகன்களுடன் அங்கு சென்றிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த சிலர், உனது கணவர் அக்காள் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தங்கை, தனது 2 மகன்களுடன் அக்காள் வீட்டிற்கு வேகமாக சென்றார். இவர்களை பார்த்ததும் கணவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே தங்கை, எனது கணவருடன் ஏன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாய்? என்று கேட்டு அக்காளுடன் தகராறு செய்தார்களாம்.
நீ உயிரோடு இருந்தால்தானே எனது கணவருடன் தொடர்பில் இருப்பாய் என்று கூறி அக்காளை தங்கை சரமாரியாக தாக்கினாராம். அவரது மகன்களும் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் 3 பேரும் சேர்ந்து சேலையால் அவரது கழுத்தை இறுக்கிக்கொலை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மகன்களுடன் தாயை கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் சொந்த அக்காவையே தங்கை கொன்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications