கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கண்ணாடியால் கிழித்து, கைகளை உடைத்து.. தந்தையை கொன்ற போதை மகன்.. நடுங்கி போன கடலூர்

Google Oneindia Tamil News

கடலூர்: பெற்ற தந்தை என்றும் பாராமல் மிக மிக கொடூரமாக கொலை செய்துள்ளார் போதைக்கு அடிமையான மகன்.. அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கடலூர் அனைகுப்பம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.. இவர் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்.. இவருடைய மனைவி சரஸ்வதி.. இவர் ஓய்வுபெற்ற தபால் நிலைய அதிகாரி.

இந்த தம்பதிகளுக்கு ஆனந்த செந்தில், கார்த்திக், கணேஷ் ஆகிய 3 மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.. இதில் கார்த்திக் கணேஷ் இரட்டை சகோதரர்கள் ஆவர்..

 மதுபோதை..புத்தி சொன்ன தந்தையையே குத்திக் கொலை செய்த மகன்.. சென்னையில் ஷாக்! மதுபோதை..புத்தி சொன்ன தந்தையையே குத்திக் கொலை செய்த மகன்.. சென்னையில் ஷாக்!

 உடல்நிலை

உடல்நிலை

சில வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியன் மனைவி கடந்த உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்.. அவர்களது மகள் அமெரிக்காவிலும், ஆனந்த செந்தில் பெங்களூரிலும், கணேஷ் சென்னையிலும் வசித்து வருகின்றனர்.. இதில் கார்த்திக் மட்டும் சுப்பிரமணியனுடன் மீனாட்சி நகரில் வசித்து வந்தனர்.. கார்த்திக் இன்ஜினியரிங், எம்பிஏ முடித்திருக்கிறார்.. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், போதை பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்.

வேலை

வேலை

வேலைக்கு எங்கும் போவதில்லை.. அடிக்கடி தண்ணி அடிக்க, அப்பா சுப்பிரமணியனிடம் செலவுக்கு பணம் கேட்டு சண்டை போடுவது வழக்கம்... அப்படித்தான் 2 நாளைக்கு முன்பும் காசு கேட்டுள்ளார்.. வழக்கம்போல் இது தகராறாக உருவெடுத்துள்ளது.. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், பெற்ற அப்பாவை வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

பென்ஷன்

பென்ஷன்

இதனை பக்கத்து வீட்டை சேர்ந்த சிவகுமார் பார்த்து தட்டி கேட்டுள்ளார்.. அதற்கு கார்த்திக், "எனக்கு செலவுக்கு பணம் தர சொல்லுங்க" என்று கூறியுள்ளார்.. உடனே சுப்பிரமணி, "மாசம் 22,000 பென்ஷன் வாங்கிறேன், எல்லாத்தையும் தந்துடறேன், என்னை அடிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்க" என்று பக்கத்து வீட்டுக்காரர் சிவகுமாரிடம் கெஞ்சியுள்ளார்.

தகராறு

தகராறு

பிறகு, காசு வாங்கி கொண்டு மது அருந்த சென்றுவிட்டார்.. இந்நிலையில் நேற்று காலை மறுபடியும் மது அருந்த பணம் கேட்டு சுப்பிரமணியனுக்கும் கார்த்திக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தன்னுடைய அப்பா சுப்பிரமணியனை இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்து கொலை செய்தார்... இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்... ரத்த வெள்ளத்தில் கை கால் உடல் முழுவதும் காயங்களுடன் இறந்து கிடந்த சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 வழக்கு பதிவு

வழக்கு பதிவு

வீட்டில் இருந்த கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மது அருந்த பணம் கொடுக்க மறுத்ததால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதுகுறித்து அவரின் பக்கத்து வீட்டுக்காரர் சிவகுமார் கடலூர் புதுநகர் போலீசில் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்தனர்.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

அதுமட்டுமில்லை, அப்பாவை கம்பியால் அடித்ததும் அவர் மயங்கி விழுந்துள்ளார்.. அவரிடம் இருந்து காசையும் எடுத்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பி உள்ளார். மது அருந்த வேண்டும் என்ற அவசரத்தில் இருந்த கார்த்திக், அப்பா தூங்கறார் என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டு போயுள்ளார். நேராக அரசு மருத்துவமனை அருகில் சென்று அங்கிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சடலத்தை வைக்க ஃப்ரீசர் பாக்ஸ் வேண்டு என்று கார்த்திக் ஆர்டர் செய்துள்ளார்..

கொலை

கொலை

உடனே ஒரு ஊழியர், ஆம்புலன்ஸ் எடுத்து கொண்டு கார்த்திக் வீட்டை பின்தொடர்ந்து வந்தனர்.. சடலத்தை எடுத்து ப்ரீசர் பாக்சில் வைக்கலாம் என்று அந்த ஊழியர் முயன்றபோதுதான், சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. போலீசார் வந்து சடலத்தை பார்த்து அதிர்ந்து விட்டனர்.. பலமுறை இரும்பு கம்பியால் அடித்து உதைத்துள்ளார்.. கைகளை முறுக்கியே உடைத்தள்ளார்.. கண்ணாடிகளை கொண்டு பலமுறை கிழித்து கொன்றுள்ளது தெரிந்தது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பிறகு வீட்டை சோதனை செய்தபோது வீடு முழுவதும் மது பாட்டில்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் குவியல் குவியலாகக் கிடந்துள்ளன.. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி மதுபாட்டில்கள் குவிக்கப்பட்டு இருந்ததாம்.. அதற்கு நடுவில் ஒரு படுக்கையை போட்டு, கூலாக படுத்து கொண்டிருந்துள்ளார் கார்த்திக்.. பல மாதங்களாக வீட்டில் சமைக்காமல், ஓட்டலில் இருந்து வாங்கி சாப்பிட்டுள்ளனர்.. அந்த பொட்டலங்களைகூட எடுத்து வெளியே போடாமல் இருந்திருக்கிறார்கள்.. கைதான கார்த்திக்கிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

English summary
Drunkard Son Killed father brutally near Cuddalore due to Drug, and investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X