உல்லாச வாழ்வு.. கணவன் துபாயில்.. கடலூரில் பரிதாப பெண்ணை வீடியோவுடன் வட்டமடித்த 2 பேர்.. தங்க நகை வேற
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.. போக்சோவில் பலரும் கைதாகினாலும், பெண்கள் மீதான குற்றங்கள் குறையாமலேயே உள்ளது.. கடலூர் சம்பவத்தில் தொடர்புடைய 2 குற்றவாளிகளும் கைதாகி உள்ளனர் என்றாலும், தனிமையில் ஒரு பெண் வசிப்பதற்கே அச்சப்படும் சூழ்நிலையும் இன்று உருவாகியிருக்கிறது. அப்படி என்ன நடந்தது கடலூர் மாவட்டத்தில்?
தமிழகத்தில் பெண் குழந்தைகளை எவ்வளவுதான் பொத்தி பொத்தி வளர்த்தாலும், பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிறது.. பெண்கள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன..

அதேபோல, குடும்ப வன்முறைகளும் பெருகி வருகின்றன. குடும்ப உறவுகள் வலுப்பட வேண்டும் என்பதற்காக, தம்பதியின ஒற்றுமை, குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவைகளில் நீதிமன்றங்கள் அதிக மிகுந்த அக்கறையை செலுத்துகிறது என்றாலும், உறவுகள் சிதைந்து, உயிர்களும் பிரியும் நிலைமை வந்துவிடுகிறது..
டபுள் ஆயுள் தந்த கோர்ட்
இதோ நேற்றுகூட, ரஞ்சிதா என்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தரப்பட்டுள்ளது.. கடந்த 2022-ல் இடப்பிரச்னையில் 4 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணிற்கு கடலுார் கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், இதே கடலூரில் தற்போது மீண்டும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.. விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.. அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அந்த 29 வயதுடைய பெண்.. திருமணமாகிவிட்டது. இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். எனவே, இந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்..
மதுபோதையில் அட்டகாசம்
இந்நிலையில் சமீபத்தில், சிவக்குமார் என்பவர் மதுபோதையில் , இந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.. கம்மாபுரம் அடுத்துள்ள கோ.மாவிடந்தல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.. பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்ததுமே, பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுத்து அப்பெண்ணிடம் காட்டி மிரட்டி, பலாத்காரம் செய்திருக்கிறார்.. அத்துடன், அதை வீடியோவாகவும் சிவக்குமார் எடுத்துக் கொண்டார்..
பிறகு, அந்த வீடியோவை காட்டி மிரட்டியே, பலமுறை தொடர்ந்து அப்பெண்ணை பலாத்காரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த வீடியோவை தன்னுடைய நண்பரான வினோத் குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார் சிவக்குமார்.
உடனே வினோத்குமார், இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.. அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதாக கூறி, பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.. ஒருகட்டத்தில், சிவக்குமார், வினோத்குமார் இருவரும் சேர்ந்து, அந்த பெண்ணை மிரட்டி, பணம், நகைகளை தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போதைக்கு அந்த பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், 3 பவுன் நகைகளும் இருந்ததால், அவற்றை அபகரித்து கொண்டனர்.
தட்டித்தூக்கிய போலீஸ்
எனினும் இன்னும் அதிகமான நகை, பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால், உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவோம் என்றும் கூட்டாக மிரட்டியிருக்கிறார்கள். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெண், இனிமேலும் பொறுக்க முடியாமல், கம்மாபுரம் போலீஸில் சென்று புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவருமே, பெண்களை மிரட்டி பணம் பறித்து உல்லாச வாழ்வு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. எனவே, வேறு பெண்களை இதுபோல இப்படி மிரட்டி வன்கொடுமை செய்துள்ளனரா என்ற விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications