45 நாளில் குட் நியூஸ்.. எடுத்ததுமே மனு வாங்க ஆரம்பித்த முதல்வர்.. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆரம்பம்
கடலூர்: "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை இன்று முதல்வர் ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் துவக்கி வைத்திருக்கிறார்.. மனுதாரர்களிடம் அவர்களது மனுக்களையும் ஸ்டாலின் பெற்று வருகிறார்.. தற்போது முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கும் இந்தத் திட்டம் இன்று முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது..
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவதுதான் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் நோக்கமாகும்.

அதன்படி, நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்பட உள்ளன.. சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் இன்று முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 196 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்..
ஸ்பெஷல் முகாம்கள்
மொத்தம் 10,000 ஸ்பெஷல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும். முகாம் பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..
ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் இம்முகாமில் , தங்களது விண்ணப்பத்தினை தரலாம்.. இம்முகாம்கள் நடக்கும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ன சான்றிதழ்கள், ஆவணங்களை இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? உள்ளிட்ட தகவல்களும், வழிகாட்டுதல்களும் வீட்டிற்கே தன்னார்வலர்கள் வந்து தருவார்களாம்.
அமுதா ஐஏஎஸ்
இதனிடையே, தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எதற்காக, எப்படி, ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களை அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கியிருக்கிறார்..
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு அதிகாரியாக செயல்பட்டுவரும் அமுதா இதுகுறித்து சொல்லும்போது, "உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் முதலமைச்சர் வலியுறுத்தியிருப்பதை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியிருக்கிறோம்.
இன்று முதல் விண்ணப்பம்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். தகுதியானவர்கள் விடுபட்டு இருந்தால் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி கொடுக்க, உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டத்தில் இணைக்கப்படுவர்.. மக்கள் அதிகமாக கூடுகிற, வசிக்கிற இடங்களில் முகாம்கள் நடத்த உள்ளோம்.
மக்களுக்கு நாம் முகாம் நடத்துவது தெரியப்படுத்த, முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்களை அனுப்பி சிறப்புத் திட்ட முகாம் நடத்த உள்ளோம். இதற்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
1100 என்ற எண்ணுடன் 100 பேர் கொண்ட உதவி மையம்
நவம்பர் வரை 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில், முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு வீடு, வீடாகச் சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். வாரத்தில் நான்கு நாட்கள் முகாம் நடைபெறும். இது நவம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கிறது.
மக்களின் குறைகளை கேட்டறிய, 1100 என்ற எண்ணுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அரசின் சேவைகளைப் பெற மக்கள் சிரமப்படுவதை அறிந்து மக்களுடன் முதல்வர் திட்டம் கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார்.. மனுதாரர்களிடம் அவர்களது மனுக்களையும் ஸ்டாலின் பெற்று வருகிறார்.. இந்த மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications