மாமியாருடன்.. அதிர்ந்து போன மகள்.. தம்பியை கொன்ற அக்கா சிக்கினார்.. வெளியான பின்னணி காரணம்..!
தம்பியை கொன்ற அக்காவை போலீசார் கைது செய்துள்ளனர்
கடலூர்: தம்பியை கொலை செய்த அக்காவை போலீசார் கைது செய்துள்ளனர்.. இதற்கான பின்னணி காரணம் பெருத்த அதிர்ச்சியை கடலூரில் ஏற்படுத்தி வருகிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ளது கழுதூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் பெரியசாமி.. இவருக்கு 2 மனைவிகள்.
முதல் மனைவிக்கு குமுதா என்ற என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு வேல்முருகன் என்ற மகனும் இருக்கிறார்கள்.. வேல்முருகனுக்கு 27 வயதாகிறது..

குமுதா
குமுதாவின் மகள் பவித்ராவை வேல்முருகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்... அக்கா மகளையே வேல்முருகன் திருமணம் செய்துள்ளார்.. இப்போது பவித்ரா 9 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார். பிரசவ நேரம் என்பதால், அம்மா குமுதா வீட்டிற்கு வந்துள்ளார். அடிக்கடி அக்கா வீட்டிற்கு வந்து மனைவியை வேல்முருகன் பார்த்துவிட்டு போவார்.. அப்படித்தான் கடந்த 28-ம் தேதி இரவும், மனைவியை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி வேல்முருகன் வேப்பூர் வந்துள்ளார்..

சிகிச்சை
அன்றைய தினம் இரவு மனைவி வீட்டிலேயே தங்கி உள்ளார்.. இரவு 11.30 மணிக்கு வேல்முருகனின் அம்மாவுக்கு குமுதா போன் செய்துள்ளார்.. தம்பிக்கு உடம்பு சரியில்லை என்றும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார். இதனால், வேல்முருகனின் அம்மா மற்றும் உறவினர்கள் பதறியடித்து கொண்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.. ஆனால், அதற்குள் வேல்முருகன் இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்..

வேல்முருகன்
குமுதாவுக்கும் வேல்முருகனுக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாம்.. ஒருகட்டத்தில் வேல்முருகன் தன்னை விட்டு பிரிந்து செல்லக்கூடும் என்பதால், சொந்த மகளையே தம்பிக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளார் குமுதா.. மகளுக்கு கல்யாணம் ஆகியும் இவர்களின் கள்ள உறவு தொடர்ந்து வந்துள்ளது.. ஒரே ரூமில்தான் படுத்து தூங்குவார்களாம்.. அக்கா - தம்பி என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்கிறார்கள்.

கொலை
சம்பவத்தன்றும் நள்ளிரவில் குமுதாவின் ரூமுக்கு சென்ற வேல்முருகன் அவரை அழைத்துள்ளார்... ஆனால், பக்கத்து ரூமில் மகள் தூங்குவதால் மறுத்துள்ளார்.. ஆனாலும் போதையில் இருந்த வேல்முருகன் குமுதாவை வற்புறுத்தவும், அவரது கழுத்தில் கை வைத்து தள்ளிவிட்டுள்ளார் குமுதா.. இதில் நிலைக்குலைந்த வேல்முருகன் கீழே விழுந்துவிட்டார்.. அவரை தட்டி எழுப்பியும் அசைவு எதுவுமே இல்லை.. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குமுதா, வேல்முருகனின் உடலை தூக்கில் கட்டி தொங்கவிட்டு, தற்கொலை நாடகம் ஆடியுள்ளது தெரியவந்தது. இப்போது குமுதா போலீசாரின் விசாரணையில் உள்ளார்.












Click it and Unblock the Notifications