கள்ளக்குறிச்சியிலிருந்து வெளியான அதிர்ச்சி ஆடியோ! சிக்கும் நகர தலைவர் -கமிஷன் கேட்டு போனில் மிரட்டல்
கள்ளக்குறிச்சி: ஏரியில் வண்டல் மணல் அள்ளுவதற்கு கமிஷன் கேட்டு கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் சுப்பராயலு மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சித் தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சுப்பராயலு. இவர், ஏரி ஆயக்கட்டு தலைவர் ஆனந்த் என்பவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வண்டல் மண் அள்ளுவதற்கு தன்னிடம் கமிஷன் வழங்க வேண்டும் என மிரட்டும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த ஆடியோவில் பேசும் சுப்பராயலு, "உன்னை தலைவரா போட்டவனே நான்தான். அத தெரிஞ்சுக்கோ. எவனையோ போட்டுவிட்டு போயிருப்பேன். உன்னை தலைவராக்கியதே நான்தான். நீ எனக்கு கூட தெரியாமல் பன்ற மாதிரி இருக்கே, என்ன அது? எனக்கு தெரியனுமா வேண்டாமா?
எனக்கு வரணும். நான் கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கேன். இல்லாவிட்டால் வண்டியை மறித்துவிடுவேன்." என்று சொல்ல மறுமுனையில் பேசிய ஆனந்த் சரி என்று சொல்கிறார். என்ன பேசி இருக்கீங்க? எப்படி பேசி இருக்கீங்க? என்று சுப்பராயலு கேட்க, ரூ.1,500 அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். ரூ.500 ஏரிக்கும் என பதிலளிக்கிறார் ஆனந்த்.
இதை கேட்ட சுப்பராயலு, யார் பேசியது உங்க கிட்ட? மண் ஓட்டுவது யாரு? என்று கேட்கிறார். இதற்கு மாவட்டச் செயலாளர் செல்வம் என ஆனந்த் கூறினார். "எந்த செல்வம், அவங்க கிட்ட பேசு. நகர செயலாளரும் கேட்கிறார் என்று அவரிடமும் சொல்லு" என்று சுப்பராயலு கூற ஆனந்த் அதற்கு சரி என்று பதிலளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications