கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தாம்பத்யம்".. நெருங்காத கல்பனா.. கல்யாண நாளில் கணவனுக்கு "பரிசு".. டபுள் ஆயுள்.. கதிகலங்கிய கடலூர்

கள்ளக்காலனுக்காக கணவனை கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

கடலூர்: கள்ளக்காதலனுக்காக கணவரை கொன்ற கல்பனாவுக்கு கடலூர் கோர்ட், இரட்டை ஆயுள் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பாண்டுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் என்ற தினேஷ்பாபு.. 36 வயதாகிறது.. கடந்த 2009-ல் அதே பகுதியை சேர்ந்த கல்பனா என்பவரை என்பவரை காதலித்தார்.

3 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில், திருமணத்துக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.. காரணம், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

அதனால், கல்பனாவிற்கு அவரது முறைமாமனை கடந்த 31.5.2012 அன்று, பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.. பண்ருட்டி தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் அந்த முறைமான்.. பெயர் சீனிவாசன்.

விருப்பமே இல்லாமல் இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது.. புதுமண தம்பதி சென்னை பட்டாளத்தில் குடியேறினர்... திருமணம் ஆன முதலிரவு நேரத்தில் இருந்தே, சீனிவாசனிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்து வந்துள்ளார் கல்பனா.. ஒவ்வொரு நாளும் பல்வேறு காரணங்களை சொல்லி, கல்பனா தாம்பத்தியத்தையும் தவிர்த்து வந்துள்ளார்... மற்றொருபக்கம், துன்னுடைய காதலர் தினேஷையும் மறக்க முடியாத நிலையில், அவருடனும் பேசி வந்துள்ளார்.. இதை பார்த்துவிட்ட சீனுவாசன் கல்பனாவை கண்டித்துள்ளார்.

ஷாக்.. ஆன்லைன் ரம்மியில் ரூ.18 லட்சம் இழப்பு.. தர்மபுரியில் 2 குழந்தைகளின் தந்தை தற்கொலை-சோகம் ஷாக்.. ஆன்லைன் ரம்மியில் ரூ.18 லட்சம் இழப்பு.. தர்மபுரியில் 2 குழந்தைகளின் தந்தை தற்கொலை-சோகம்

பீச்சில் தம்பதி

பீச்சில் தம்பதி

இதனால் எரிச்சலைடைந்த கல்பனா, சீனுவாசனை கொலை செய்ய திட்டமிட்டார்.. இதற்கான தருணத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தார்.. அதன்படி, இவர்களின் முதலாமாண்டு திருமண நாள் வந்தது.. அந்த நாளை கொண்டாட தம்பதி 2 பேரும் சொந்த ஊருக்கு சென்றார்கள்.. 1.6.2013 அன்று கடலூரில் சினிமாவுக்கும் போனார்கள்.. பிறகு பீச்சுக்கும் போனார்கள்.. பிறகு அங்கிருந்து கிளம்பி, பாலூர் வழியாக பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.. எந்த ரூட்டில் வருகிறோம் என்பதை கல்பனா தன்னுடைய செல்போனில் தினேஷிற்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினார்.

பைக் வழிமறித்த கும்பல்

பைக் வழிமறித்த கும்பல்

உடனே தினேஷ், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான முரளி என்ற முரளி கிருஷ்ணன் உட்பட 3 பேரைக்கு துணைக்கு அழைத்து கொண்டு கிளம்பினார்.. அப்போது பைக், டி.ராசாப்பாளையத்தில் வந்து கொண்டிருந்தது.. அங்கே சீனுவாசனின் பைக்கை மறித்த தினேஷ், கத்தியால் சீனுவாசனை குத்தி கொன்றார்.. ரத்தவெள்ளத்தில் திருமண நாளன்றே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார் சீனுவாசன்.. கண் முன்னே கணவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட கல்பனா, போலீசுக்கு ஓடினார்..

ஜவஹர் தீர்ப்பு

ஜவஹர் தீர்ப்பு

தன் கணவரை அடையாளம் தெரியாத 3 பேர் கொலை செய்துவிட்டு, தான் அணிந்திருந்த 10 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர் என்று பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.. இது தொடர்பாக பண்ருட்டி ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது.. போலீசாரும் அதன் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், காதலருடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.. இதனையடுத்து கள்ளக்காதலர்கள், தினேஷ் நண்பர் என மூன்று பேரையும் கைது செய்தது போலீஸ்.. இதுகுறித்த வழக்கு விசாரணை கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி ஜவஹர் இதில் தீர்ப்பு கூறியுள்ளார்..

ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை

அதில், கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்த கல்பனா, தினேஷ்பாபு ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும் கல்பனாவிற்கு ரூ.4 ஆயிரம், தினேஷ்பாபுவிற்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.. ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.. மேலும், முரளிகிருஷ்ணன் அப்ரூவராக மாறியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.. இந்த கொலை அன்றைய தினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இரட்டை ஆயுள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

English summary
kalpana brutality of the husband who denounced adultery and double life sentenced by cuddalore court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X