திருமா 10 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கணும்.. நாடே சிதம்பரத்தை திரும்பி பார்க்கணும்: கமல்
கடலூர்: என் தம்பி திருமாவளவனை 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்தியாவே சிதம்பரத்தை திரும்பி பார்க்க வேண்டும் மநீம தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் 40 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் அங்கம் வகித்து வருகிறது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரத்தில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் கமல்ஹாசன்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சிதம்பரத்தில் பெரும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பேசினார்.
கமல்ஹாசன் பேசுகையில், "ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. அதனால் தான் நானும் என் தம்பி திருமாவளவனும் தோளோடு தோள் உரசி நிற்கிறோம். நாம் வீரர்கள், களம் கண்டே ஆகவேண்டும். சாதியம் தான் என் எதிரி. சாதியத்திற்கு என் வாழ்வில் இடமில்லை.
2009ல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் திருமாவளவன். ஆனால், கடந்த 2019ல் வெறும் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார். அப்போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். திருமாவளவனை 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பேசியுள்ளார் தம்பி உதயநிதி ஸ்டாலின்.
இந்த முறை என் தம்பி திருமாவளவனை 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அப்படி ஜெயிக்க வைத்தால் தான் படித்துப் பாடம் கற்காத அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும். இந்தியாவே சிதம்பரத்தை திரும்பி பார்க்க வேண்டும்" என மநீம தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மேலும் பேசிய கமல்ஹாசன், "திருமா ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மக்களின், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடும் தலைவன். இது வாக்குறுதி அல்ல, சாட்சி. நான் பார்த்ததன் சாட்சி. களங்கமற்ற கறுப்பு வைரம் தம்பி திருமாவுக்கு இந்த பானை சின்னத்தில் வாக்குகளை பதிவு செய்யுங்கள்" எனப் பேசினார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications