அப்படி போடு.. ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை! கவலையோடு கேட்ட மக்கள் - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
கடலூர்: மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ள நிலையில், மக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அமைச்சர் சிவி கணேசன் விளக்கம் கொடுத்தார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்ற பெண்கள் யார் என அறிவித்தது. அதன்படி, குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி தாக்கல் செய்பவர்கள், சொந்த பயன்பாட்டுக்கு 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களை சேர்ந்த தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கிடையாது என அரசு அறிவித்தது.
மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள், மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிமைத் தொகை கோர முடியாது. ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது.
அதேபோல், அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் ஓய்வூதியம் பெற்று வரும் குடும்பங்களின் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி மக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் இதற்கான முகாம் தொடங்கப்பட்டது. ஆகஸ்டு 4 ஆம் தேதி முதல் கட்ட முகாம் நிறைவடைந்தது. 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் அதன் மூலம் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
ஆகஸ்டு 5 ஆம் தேதி 2 ஆம் கட்ட முகாம் தொடங்கப்பட்டது. 18 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த 2 ஆம் கட்ட முகாமிலும் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக ஆகஸ்டு 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு சிறப்பு முகாம் நடத்தியது. இதன் மூலமாக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்து உள்ளன.
விண்ணப்பங்களில் சரியான தகவல்கள் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பது விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்ற ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது. விண்ணப்பங்களின் ஆய்வுப் பணிகள் நடைபெற்று முதற்கட்ட பட்டியலும், அதன் தொடர்ச்சியாக இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதில் 63 லட்சம் விண்ணப்பதாரர்கள் நீக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு, தகுதியான அனைவருக்கும் கிடைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். இந்த நிலையில் விருத்தாசலத்தின் ஆய்வுப் பணியில் இருந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி கணேசனிடம் பெண்கள், ரூ.1000 உரிமைத் தொகை எங்களுக்கு எல்லாம் கிடைக்குமா என கவலையோடு வினவினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், வதந்திகளை நம்ப வேண்டாம். நீங்கள் கவலைப்பட வேண்டாம். அரசு ஊழியர்கள், பணக்காரர்களுக்குதான் கிடைக்காது. உங்களை போன்ற அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை கண்டிப்பாக கிடைக்கும்."
-
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
கேம் ஓவர்.. விஜய் போட்ட சிங்கப்பெண் ஸ்கெட்ச் பின்னணி! இனி நேரா முதல்வர் ஆபீஸ் லிங்க்.. சைபர் டீம் அதிரடி












Click it and Unblock the Notifications