கடலூர் அருகே நண்பனின் காதலியை திருமணம் செய்தவருக்கு ட்விஸ்ட்.. கம்பி எண்ணும் புதுமாப்பிள்ளை

Subscribe to Oneindia Tamil

கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வேலக்குடி பகுதியை சேர்ந்த 21 வயதாகும் பாலகணபதி என்பவர் சாலியான் தோப்பு பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் ஐஸ்வர்யா என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிட்டது. ஆனாலு பாலகணபதி, அடிக்கடி ஐஸ்வர்யாவை தனிமையில் சந்தித்து வந்தாராம். இதனால் கோபம் அடைந்த புதுமாப்பிள்ளை தனது நண்பனுடன் செய்த செயலால் இப்போது கம்பி எண்ணி வருகிறார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேலக்குடி பகுதியை சேர்ந்த 21 வயதாகும் பாலகணபதி என்பவர் சாலியான் தோப்பு பகுதியில் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நண்பர் மேலமூங்கிலடி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு 25 வயது ஆகிறது. வினோத்குமார் காரைக்காலில் பழக்கடை நடத்தி வருகிறார். பாலகணபதி, ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் பாலகணபதியின் நண்பரான வினோத்குமாருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

Cuddalore marriage

வினோத்குமார் தனது நண்பன் என்பதால் அடிக்கடி பாலகணபதி, வினோத்குமார் வீ்ட்டுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஐஸ்வர்யாவுக்கும், முன்னாள் காதலருமான பாலகணபதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம், இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

வினோத்குமார் காரைக்காலுக்கு வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டில் இல்லாத நேரத்திலும் கூட பாலகணபதி அங்கு சென்று ஐஸ்வர்யாவை தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் வினோத் குமாருக்கு தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் பாலகணபதியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தாராம்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு வினோத்குமார், தனது நண்பர் ஸ்ரீராம்(21) ஆகிய இருவரும் பாலகணபதியை மது அருந்த வருமாறு திட்டமிட்டு அழைத்து வந்தார்களாம். உடனே அவரும் அங்கு வந்தார். பின்னர் 3 பேரும் மேலமூங்கிலடி பகுதியில் உள்ள வெள்ளாற்றங்கரைக்கு சென்று ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது வினோத் குமார், ஸ்ரீராம் ஆகிய இருவரும் கத்தியால் போதையில் இருந்த பால கணபதியின் தலையில் சரமாரியாக தாக்கி கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வினோத்குமார், ஸ்ரீராம் ஆகிய இருவரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+