முதல்வன் பட பாணி.. போலீஸ் வேன் அடியில் தலையை வைத்த பாமகவினர்! அன்புமணி ராமதாஸ் கைதால் பதற்றம்
கடலூர்: என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று கடலூரில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொண்டர்கள் சிலர் போலீஸ் வாகனத்தின் அடியில் தலைவைத்து முதல்வன் பட பாணியில் அன்புமணி ராமதாஸை அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தை விரிவாக்கம் செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதாவது என்எல்சி நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் பணிகளுக்காக வளையமாதேவியில் இன்னும் 2 மாதத்தில் அறுவடைக்கு தயாரான விளைநிலங்களில் ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் இறங்கி நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கின.

இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடந்து வந்தது. இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து என்எல்சி வெளியேற வேண்டும் என அவர் ஆக்ரோஷமாக பேசினார். மேலும் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இந்த வேளையில் போலீசார் மற்றும் பாமகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. இரும்பு தடுப்பு வேலிகள் தள்ளப்பட்டன. போலீஸ் வாகனம் மீது கல்வீசப்பட்டது. அதோடு போலீஸ் அதிகாரியின் மண்டை உடைந்ததோடு, 10 பேர் வரை காயமடைந்தனர்.
மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தடியடி நடத்தினர். வஜ்ரா வாகனத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. அதோடு அன்புமணி ராமதாஸை அதிரடியாக கைது செய்த போலீசார் வேனில் ஏற்றினர். இதனால் ஆக்ரோஷமடைந்த கட்சியினர் போலீஸ் வேனை சூழ்ந்து கொண்டனர். மேலும் அன்புமணி ராமதாஸை அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் அவர்கள் தடுத்தனர்.

இந்த வேளையில் சிலர் முதல்வன் பட பாணியில் போலீஸ் வேனின் முன்புறம் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் வேன் அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து போலீஸ் வேன் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. போலீஸ் வேனின் முன்பும், பின்னும் பாமக கட்சியை சேர்ந்தவர்கள் அன்புமணி ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டபடி செல்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications