கடலூர்: கட்டடம் இடிந்த விபத்தில் 2 சிறுவர்கள் பலி - முதல்வர் ஸ்டாலின் தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி
கடலூர் அருகே பழைய கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
கடலூர்: இலங்கை தமிழர்களுக்காக கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் கட்டப்பட்டிருந்த பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் ராமாபுரம் கிராமத்திலுள்ள பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் வீரசேகர் மற்றும் சதிஷ் என்ற சிறுவர்கள் உயிரிழந்தனர். இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி மேலும் சிறுவர்கள் சிக்கியுள்ளனரா? என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த கட்டிடம் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட பழைய குடியிருப்பாகும். யாரும் வசிக்காத நிலையில் கட்டிடங்கள் இருந்த நிலையில் தற்போது இடிந்து விழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து பராமரிப்பு அற்ற பள்ளிக்கட்டிடங்களை இடிக்க அரசு உத்தரவிட்டது. இதே போல பராமரிப்பு இல்லாமல் பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே முதல்வர் மு.க ஸ்டாலின் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் நிதி உதவியும் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் ராமாபுரம் கிராமத்திலுள்ள பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் வீரசேகர் மற்றும் சதிஷ் என்ற சிறுவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications