வடகிழக்கு பருவமழை...கடலூரில் வெள்ளத்தை தடுக்க என்னென்ன ஏற்பாடுகள்..கேகேஎஸ்எஸ்ஆர் சொன்னது இதுதான்
கடலூர்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதி, குறைவாக பாதிக்க கூடிய பகுதி என்று மொத்தம் 228 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது என்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. பெருவெள்ளம் ஏற்பட்டால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் முடிந்த பிறகு வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடலூர்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், அதற்காக கடலூர் மாவட்டத்தை தயார்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எங்களை இங்கு அனுப்பியுள்ளார். பொதுவாக கடலூர் மாவட்டம் மழை, வெள்ளம், புயல், போன்றவற்றால் அதிகம் பாதிக்கக்கூடிய மாவட்டமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதி, குறைவாக பாதிக்க கூடிய பகுதி என்று மொத்தம் 228 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

என்னென்ன ஏற்பாடுகள்
இந்தப் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மொத்தம் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தங்குவதற்காக திருமண மண்டபங்கள், பள்ளிகள் கல்லூரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள 1077 என்ற தொலைபேசி எண் உள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக அரசு இயந்திரம் அந்த இடத்திற்கு விரைந்து வந்து தனது செயல்பாடுகளை தொடங்கும்.

பேரிடர் மீட்பு பயிற்சி
இது போக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் சுமார் 5000 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இது போக மேலும் 2000 மீட்பு படையினர் தயாராக உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 325 கிலோமீட்டர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் 3521 கி.மீ கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதர பகுதிகளில் 117 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்டுள்ளது. எனவே இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

பட்டா + சாதி சான்றிதழ்
தமிழகத்தில் தற்போது மக்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டு பட்டாக்கள் நிறைய உள்ளன. அந்த கூட்டு பட்டாக்களை பிரித்து தனிநபர் பட்டாக்களாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இதுவரை விளிம்பு நிலையில் உள்ள 1.50 லட்சம் பேருக்கு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதுபோக கடலூர் மாவட்டத்தில் 6241 பேருக்கு எஸ்டி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியரை நாங்கள் பாராட்டுகிறோம்.

முதியோர் ஓய்வூதியம்
அதுபோல தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதியத்தையும் பரிசீலனை செய்து தகுதியுள்ள நபர்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்சியிலும் இதுபோன்ற தகுதி இல்லாத நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்படும். தமிழகம் முழுவதும் 34 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 681 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
-
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications