சிதம்பரம் நடராஜர் கோவிலில் குப்பை அள்ளிய விஜயா சுருக்கு பையில் 25 ஆயிரத்தை சுட்ட புரோகிதர்

Subscribe to Oneindia Tamil

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் துப்புரவுத் தொழிலாளி வங்கி கணக்கிலிருந்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் பணத்தை திருடிய புரோகிதம் செய்பவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை மீட்டனர்.

தென் இந்தியாவில் இருக்கும் மிகவும் பழமைவாய்ந்த கோயில்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில். பஞ்சபூத தலங்களில், ஆகாய தலமாக விளங்கும் இந்த கோயிலில் அருள் பாலிக்கிறார் ஆடல்வல்லான் நடராஜர்.

இந்த ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள், ஆலய நிர்வாக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனார். அவர்களுக்கு நேரடியாக அவர்களது ஊதியம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் துப்புரவு பணியாளராக பணியாற்றுபவர் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மனைவி விஜயா (50). இவர் தனது சுருக்குப் பையில், ரகசிய எண்ணுடன் ஏடிஎம் கார்டுடன் கடந்த ஜூன் 9-ம் தேதி கோயிலில் வேலை செய்யும் போது தொலைத்துவிட்டார்.

ஏடிஎம் அட்டை மாயம்

ஏடிஎம் அட்டை மாயம்

பின்னர் அன்றைய தினமே அவரது வங்கி கணக்கிலிருந்து ஏடிஎம் மைத்திலிருந்து ரூ25 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்து அதிர்ச்சியுற்றார். இது குறித்து விஜயா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வங்கி ஏடிஎம் மைய கேமராவை ஆய்வு செய்தனர்.

ஐயர் திருட்டு

ஐயர் திருட்டு

அப்போது அந்த பணத்தை திருடியது சிதம்பரம் கீழபுதுத்தெருவைச் புரோகிதம் செய்யும் சீனுவாசன் மகன் அமிர்தகடேஸ்வர ஐயர் என்பது தெரியவந்து. போலீஸார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.25ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்.

அதிரடி கைது

அதிரடி கைது

மேலும் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து அமிர்தகடேஸ்வர ஐயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் பணத்தை இழந்த விஜயாவை வரவழைத்து அவர் இழந்த பணத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்தனர். இதனையடுத்து போலீசாருக்கு விஜயா கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+