பத்தோடு பதினொன்றாக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? ஸ்டாலின்-ஜோ பைடன் சந்திப்பு பற்றி வேல்முருகன்
கடலூர்: இந்தியாவில் வேறு எந்த மாநில முதலமைச்சருக்கும் கிடைக்காத பெருமையாக அமெரிக்க அதிபரை சந்திக்கும் வாய்ப்பு தமிழக முதலமைச்சருக்கு கிடைத்திருக்கிறது என தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பத்தோடு பதினொன்றாக டெல்லிக்கு சென்று கும்பிடு போட்டிருந்தால் இந்த மரியாதை கிடைத்திருக்காது என்றும் தனித்துவமான ஆட்சி நிர்வாகத்துக்கும், சமூக நீதி செயல்பாட்டுக்கும் கிடைத்த பெருமை தான் இந்த நிகழ்வு என வேல்முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடலூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல மண விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார். மத்திய அமைச்சரே தொலைபேசி மூலம் நேரடியாக விடுத்த அழைப்பின் பேரில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றார் என்றும் தமிழகத்தின் முதல்வர் இவர் தான் என்று அமெரிக்க அதிபருக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் என்றால் அதற்கு சுயமரியாதையே காரணம் எனக் கூறினார்.
அதேபோல் சனாதனம் குறித்த பேச்சிலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்வாங்காமல் துணிச்சலாக அதை எதிர்கொண்டதை பாராட்டிய வேல்முருகன், தமிழ்நாட்டின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார் எனக் கூறினார். அண்மைக்காலமாக திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்பட்ட வேல்முருகன், இன்றைய தினம் அது எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசினார்.
வேல்முருகனின் பேச்சை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி, சிவசங்கர் ஆகியோர் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். இதனிடையே திமுக நிர்வாகி இல்ல மண விழாவுக்கு வந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் சரியாக பேசிக்கொள்ளவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications