TNPSC குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்தவரின் அசர வைத்த பதில்.. வீடியோவால் சர்ச்சை
கடலூர்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த பாலமுருகன் என்பவர் எக்குத் தப்பாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் 9 மாதங்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு குரூப் 4 அரசுப் பணிகளுக்கு கூடுதலாகப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன.
இதன்படி, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்கான மொத்த பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்களின் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. அதேபோல சுருக்கெழுத்தர் தட்டச்சர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,024-ல் இருந்து 1176 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

தேர்வு எழுதியவர்கள்
இதனிடையே குரூப்-4 தேர்வு முடிவுகள குறித்து சர்ச்சை எழுந்தது. நன்றாக படித்தவர்களுக்கு சரியான மதிப்பெண் அளிக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

பாலமுருகன்
இந்நிலையில் கடலூரில் இயங்கி வரும் தென்காசியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் கிளையில் படித்த பாலமுருகன் என்பவர், மாநில அளவில் குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நடத்திய பாராட்டு விழாவின்போது பாலமுருகன் எக்குத் தப்பாக பேசிய வீடியோ இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இருக்கு
பாலமுருகன் பேசும் போது, பாக்சலந்தி, கட்ச், மன்னர் வளைகுடா இந்தியாவில் இருக்கிறது. ஆனால் ஆசியாவில் இல்லை என்று கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அவர் பேசுவது எப்படி இருக்கிறது என்றால், பாக்சலந்தி , கட்ச் மன்னர் வளைகுடா எங்கு இருக்கிறது என்று கேள்வி இடம் பெற்று இருந்ததாகவும், அதற்கு ஆப்சன் இந்தியா, ஆசியா என்று இருந்ததாகவும், நிச்சயம் ஆசியா இல்லை, இந்தியாவில் தான் இருக்கிறது என்று டிக் செய்ய வேண்டும். அதைத்தான் செய்தேன் என்று பாலமுருகன் கூறுகிறார்,.

இந்தியாவில் இருக்கு
பாலமுருகன் மேலும் பேசுகையில், என்னை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், அப்படிங்றதை நான் யோசிக்க மாட்டேன், எனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே செய்வேன். அதை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்ற பார்வையை பற்றி எனக்கு தெரியவில்லை. இப்போது போட்ட உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது" என்றும் கூறினார். பாலமுருகன் பேசும் போது, பாக்சலந்தி, கட்ச், மன்னர் வளைகுடா இந்தியாவில் இருக்கிறது. ஆனால் ஆசியாவில் இல்லை என்று கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அவர் பேசுவது எப்படி இருக்கிறது என்றால், பாக்சலந்தி , கட்ச் மன்னர் வளைகுடா எங்கு இருக்கிறது என்று கேள்வி இடம் பெற்று இருந்ததாகவும், அதற்கு ஆப்சன் இந்தியா, ஆசியா என்று இருந்ததாகவும், நிச்சயம் ஆசியா இல்லை, இந்தியாவில் தான் இருக்கிறது என்று டிக் செய்ய வேண்டும். அதைத்தான் செய்தேன் என்று பாலமுருகன் கூறுகிறார்,.

பலன் கிடைத்துள்ளது
பாலமுருகன் மேலும் பேசுகையில், என்னை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், அப்படீன்றதை நான் யோசிக்க மாட்டேன், எனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே செய்வேன். அதை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்ற பார்வையை பற்றி எனக்கு தெரியவில்லை. இப்போது போட்ட உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது" என்றும் கூறினார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications