அனிதாவின் "அட்ராசிட்டி".. துடித்தே உயிரிழந்த போலீஸ்காரர்.. தலைதூக்கும் கந்துவட்டி.. கொடூர பெண் கைது
அனிதா என்பவரை கந்துவட்டி கொடுமையால் போலீசார் கைது செய்தனர்
கடலூர்: கந்துவட்டி கொடுமை மீண்டும் தலைதூக்கி உள்ள நிலையில், ஒரு உயிர் பரிதாபமாக போயிள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் செல்வக்குமார்,, 27 வயதாகிறது.. இவர் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
கடந்த 1-ம் தேதி கடலூர் வந்திருந்த அவர், கோர்ட் பக்கத்தில் திடீரென மயங்கி கீழே விழுந்தார்... இது பற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸார், விரைந்து சென்று, மயங்கி கிடந்த செல்வக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அனிதா
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் விஷம் குடித்தது தெரியவந்தது... அதாவது, குடும்ப செலவுக்காக அனிதா என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம்.. அந்த பணத்தையும் திருப்பி செலுத்தி விட்டாராம்... ஆனால், அனிதா, புரோ நோட்டை தராமல், மறுபடியும் மறுபடியும் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்.. இதனால் மன வேதனை அடைந்த அவர் விஷம் குடித்து போலீஸ் எஸ்பி ஆபீசுக்கு வந்துள்ளார்..

விசாரணை
அங்கே நடந்து வந்தபோதுதான் திடீரென மயங்கி விழுந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரது உடல் நிலை மோசமானதால், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.. ஆனால், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.. இன்று காலை அவர் உயிரிழந்தார்.. இதையடுத்து, புதுநகர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்..

போலீஸ்காரர்
தற்போது, கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கந்துவட்டி அனிதாவை போலீசார் கைது செய்தனர்... காவலர் செல்வகுமாருக்கு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக, செல்வக்குமாரின் அப்பா புகார் தந்திருந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில் அனிதா கைதாகி உள்ளார்.. இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு, கந்துவட்டி டார்ச்சர் தாங்காமல், இசக்கிமுத்து என்பவர், தன் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் ஆபீசில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்..

கடிவாளம்
இந்த சம்பவம் தமிழகத்தை நிலைகுலைய வைத்தது.. ஒருகுடும்பமே தீயில் வெந்து இறந்ததை கண்டுமக்கள் துடிதுடித்தனர்.. இதற்கு பிறகுதான், கந்துவட்டி விவகாரத்தில் அரசு தலையிட்டது.. கடிவாளத்தையும் போட்டது.. இது தொடர்பான மரணங்களும் ஓரளவு குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஒரு உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது.. பெண் ஒருவர் தந்த டார்ச்சரால், அப்பாவி ஒருவர், அதுவும் போலீஸ்காரரே தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications