அய்யோ என் புருஷன கொன்னுட்டாங்க! கதறி துடித்த ’ஷகிலா’! அப்பறம் நடந்தது தான் ட்விஸ்டே! கலங்கிய கடலூர்!
கடலூர் : கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளியை அவரது மனைவி, மகளின் காதலனுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 4-வது வட்டம் புண்ணாக்கு தெருவில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்த சண்முகம், என்.எல்.சி. 1-வது சுரங்கத்தில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி நிர்மலா என்ற ஷகிலா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் நடந்து, அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். 2-வது மகளும், மகனும் சேலத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர்.

என்எல்சி தொழிலாளி
2-வது மகள் நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகத்திடம் அவரது மனைவி ஏன் என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை என்று கேட்டுள்ளார். இதில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சண்முகம் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஷகிலா வீட்டுக்கு வெளியே நின்ற ஆம்னி வேனில் படுத்து தூங்கினார்.

கொடூர கொலை
நேற்று காலை வேலைக்கு செல்ல வேண்டிய சண்முகம் வீட்டின் கதவை திறக்காமல் இருந்தார். இதை பார்த்த அவரது மனைவி, கதவை தட்டினார். ஆனால் சண்முகம் திறக்கவில்லை. உடனே, ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அங்கு வீட்டின் உள்ளே சண்முகம் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷகிலா, உடனடியாக டவுன்ஷிப் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

போலீஸ் விசாரணை
அங்கு கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் சண்முகம் இறந்து கிடந்தார். இதன் மூலம் அவரை மர்மநபர்கள் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அந்த நாய், சிறிது தூரம் சென்று நின்றது. கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

தீவிர தேடுதல் வேட்டை
பின்னர், சண்முகம் உடலை போலீசார் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கா அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சண்முகத்தின் அண்ணன் பிச்சையாபிள்ளை கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, நகர போலீசார், டெல்டா பிரிவு போலீசார் கொலையாளிகள் யார் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஷகிலா மீது சந்தேகம்
இதற்கிடையே சண்முகம் கொலை செய்யப்பட்ட வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தாலும், வீட்டின் பின்பக்க கதவை திறந்து எளிதில் உள்ளே வந்துவிட முடியும். எனவே இதுபற்றி அறிந்த மர்ம நபர்கள்தான், உள்ளே புகுந்து சண்முகத்தை வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன்படி, முதலில், சண்முகத்தின் மனைவி ஷகிலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதிரடி கைது
இதையடுத்து, ஷகிலா, தமிழ்வளவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இறுதிவரையில் மகளின் காதல் விவகாரம் குறித்து சண்முகம் தெரிந்து கொள்ளாமலே படுகொலை செய்யப்பட்டுள்ளார். சண்முகம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் பொருளாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications