சிதம்பரம் அருகே ஓடும் பேருந்தில் அப்படி ஒரு சம்பவம்.. ஆடிப்போன பெண்.. யார் அந்த மர்ம நபர்?
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தனது மகளுக்கு ஆசை ஆசையாய் நகை வாங்க பணத்துடன் சென்றுள்ளார் ஒரு பெண்.. அதற்காக பேருந்தில் ஏறி சென்றவருக்கு, பேருந்தை விட்டு இறங்கிய பின்னர் தான் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பணம் மொத்தத்தையும் ஓடும் பேருந்தில் தனதுபெண்ணிடம் இருந்து மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இதுபற்றி புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூட்டமான பேருந்துகளில் நகை, பணம் வைத்து செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டியது அவசியம் ஆகும். ஏனெனில் திருடர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். திருடர்களிடம் பணத்தையும் , நகைகயும் பாதுகாக்க நிறையவே இங்கு மெனக்கடவேண்டியிருக்கிறது. கூட்டமான பேருந்துகளில் இடிப்பது போல் வந்து பிளேடு போட்டு பாக்கெட்டில் உள்ள பர்சை திருடுபவர்கள் அதிகம்.

அதேபோல் கூட்டமான இடங்களில் பைகளை எடுத்துக்கொண்டு அப்படியே போய்விடுபவர்களும் அதிகம்.. பேருந்துகளில் சிசிசிடிவி கேமராக்கள் இல்லாமல் போனால் திருடர்களை கண்டுபிடிப்பது மிக கடினம். இப்போது வரும் தனியார் பேருந்துகள் பலவற்றில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் பழைய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்காது என்பதால் திருடர்களை பிடிக்க முடியாமல் போக வாய்ப்பு அதிகமாக உள்ளது. கையும் களவுமாக சிக்கினால் மட்டுமே திருடர்களை இன்றைக்கு பிடிக்க முடிகிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சாத்தமங்கலம் சிவன் கோவில் தெருவை அந்தோணிசாமி, மற்றும் அவருடைய மனைவி லீமாமேரி (வயது 49) ஆகிய இருவரும் தங்களது மகள் நந்தினிக்கு புதிய நகைகள் வாங்க முடிவு செய்தார்கள். இதையடுத்து கணவன்-மனைவி 2 பேரும் தங்களது மகளுடன் ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் ரொக்கத்தை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு நகை வாங்குவதற்காக சாத்தமங்கலத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி சிதம்பரம் நகை கடைக்கு புறப்பட்டு சென்றார்கள்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதில் பணப்பையை லீமாமேரி வைத்திருந்தார். அந்த பஸ் சிதம்பரம் கஞ்சி தொட்டி முனை பஸ் நிறுத்தத்தில் நின்றிருக்கிறது. அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய லீமாமேரி அருகே உள்ள நகை கடைக்கு செல்வதற்கு முன்பு தான் வைத்திருந்த பையை பார்த்துள்ளார். அதில் இருந்த பணத்தை காணவில்லை.
ஓடும் பஸ்சில் தங்களுடன் பயணம் செய்த மர்மநபர் யாரோ?, கூட்ட நெரிசலை பயன்படுத்தி தான் வைத்திருந்த பையில் இருந்த பணத்தை திருடிச் சென்றிருப்பதை கண்டார்.. இதனால் பதறிய லீமாமேரி திருடுபோன பணத்தை மீட்டு தரக்கோரி சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பஸ்சில் வந்த பெண்ணிடம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மகளுக்கு ஆசை ஆசையாய் நகை வாங்கி கொடுக்க சிதம்பரத்தில் பஸ்சில் வந்த பெண்ணிடம் மர்மநபர் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications