கள்ள காதலில் நேர்மை.. இந்தியர்களிடம் மாறி வரும் கலாச்சாரம்.. சர்வே முடிவில் ஷாக்
டெல்லி: உலகம் முழுவதும் கள்ளக்காதல் இருந்து வருகிறது. இதற்கு நம் நாடும் விதிவிலக்கல்ல. கள்ளக்காதல் தகராறு, கள்ளக்காதலில் கொலை என நாம் பல்வேறு செய்திகளை தினமும் கேள்விப்பட்டு வருகிறோம். இந்நிலையில் தான் கள்ளக்காதலில் இந்தியர்கள் நேர்மையுடன் இருப்பதாகவும், கள்ளக்காதல் மூலமாக தங்களின் ஜோடியை ஏமாற்றுவது கடந்த 2 ஆண்டுகளில் 16 சதவீதம் வரை குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. என்னது கள்ளக்காதலில் நேர்மையா? அப்படியென்றால் என்ன, என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாடு உள்பட வெளிநாடுகளில் திருமணத்துக்கு பிறகும் கூட ஒருதரப்பினர் கள்ள உறவில் ஈடுபட்டு வருகின்றனர். இது இருவரின் குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனாலும் கூட அளவுக்கடந்த ஆசையால் அவர்களால் கள்ளஉறவை கைவிட முடியாமல் தவிக்கின்றனர்.

மேலும் திடீரென்று கள்ள உறவை கைவிடும்போது பிரச்சனைகள், கொலைகள் கூட நடந்து வருகின்றன. இதனை நாம் தினமும் பத்திரிகை, செய்திகளில் பார்த்து வருகிறோம். இந்நிலையில் தான் நம் நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபடுவோர் நேர்மையுடன் இருப்பதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் 16 சதவீதம் வரை தங்களின் ஜோடியை ஏமாற்றுவது சரிந்துள்ளதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் வருமாறு:
உலகம் முழுவதும் Gleeden எனும் டேட்டிங் செயலி உள்ளது. இது உலகம் முழுவதும் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு வைத்து கொள்ளும் நபர்களுக்கான டேட்டிங் செயலி ஆகும். இந்த Gleeden செயலி மற்றும் IPSOS எனும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சமீபத்தில் சர்வே ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சர்வே முடிவு தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி இந்தியாவில் கணவன் - மனைவிக்கு தெரியாமலும், மனைவி, கணவனுக்கு தெரியாமலும் இன்னொருவருடன் உறவு வைத்து ஏமாற்றுவது கடந்த 2 ஆண்டுகளில் 16 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியென்றால் கள்ளக்காதல் குறைந்து விட்டதாக நினைக்க வேண்டாம். மாறாக தங்களின் துணைக்கு தெரிந்த கள்ளக்காதலில் ஈடுபடுகின்றனர் என்பது தான் இதன் பொருளாகும். இதுபற்றி கிளீடன் செயலின் நம் நாட்டுக்கான மேனேஜர் சைபில் ஷித்டெல் கூறுகையில், ‛‛பாரம்பரிய திருமணம் வரலாற்று ரீதியாக முழுமையான ஒருதார மணத்தைக் குறிக்கிறது.
ஆனாலும் துரோகம் என்பது பலருக்கும் நடந்து வருகிறது. இப்போது துரோகம் மாறி உள்ளது. பலருக்கும் தங்களின் இணைக்கு துரோகம் செய்கிறோமே என்ற எண்ணம் வந்துள்ளது. இதனால் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட தொடங்கி உள்ளனர்.
எங்கள் ஆய்வில் பலரும் ஒரு திருமணத்தின் மீது நம்பிக்கை கொண்டவராக இல்லை என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில் 50 சதவீதம் பேர் ஒரு திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளனர். ஆய்வில் பங்கேற்ற 61 சதவீதம் பேர் இந்த சமூகம் ஒரு திருமண உறவை மட்டுமே விரும்புகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது அவர்களின் உள்ளுணர்வுக்கு எதிராக இருந்தாலும் கூட இப்போது படிப்படியாக மாறி வருகிறது
சர்வவேயில் பங்கேற்றவர்களில் 69 சதவீதம் பேர் வெளிப்படையாக உறவு வைத்துள்ளதை மக்கள் ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் 35 சதவீதம் பேர் வெளிப்படையான உறவில் உள்ளதாக தெரவித்துள்ளனர். 41 சதவீதம் பேர் தங்களின் இணையர் ஒப்புக்கொண்டால் இன்னொரு உறவுக்கு தயார் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தியாவில் தங்களின் ஜோடியை ஏமாற்றுவது 16 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் அவர்கள் கள்ள உறவில் இல்லை என்பது கிடையாது. அவர்கள் தங்களின் துணையுடன் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் அதற்கு சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது‛‛ என்றார்.
ஜோடியை ஏமாற்றும் விகிதம் சரிந்து இருந்தாலும் கூட அவர்கள் தங்களின்ஜோடிக்கு தெரிந்த கள்ளக்காதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications