பாத்ரூமுக்குள் 14 வயது சிறுமி பலாத்காரம்.. கொரோனா மையத்திலேயே நடந்த அக்கிரமம்.. தலைநகரம் ஷாக்!
கொரோனா பாதித்த 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்
டெல்லி: பாத்ரூமுக்கு போன 14 வயசு பொண்ணை ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார்.. இந்த சம்பவம் கொரோனா வார்டிலேயே நடந்துள்ளது.. பாதிக்கப்பட்ட பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியும் தொற்று பாதித்தவர், அவரை சீரழித்த அந்த கயவனும் தொற்று பாதித்தவர்தான்.. டெல்லியில் இந்த கொடுமை நடந்துள்ளது!
டெல்லியின் சத்தார்பூரில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை நல மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.. ஆளுனர் அனில் பைஜால் முன்னிலையில், இந்த மாசம்தான் இந்த மையம் துவக்கி வைக்கப்பட்டது.

இங்கு ஒரு சிறுமிக்கு தொற்று பாதிப்பு இருந்துள்ளது.. 14 வயசுதான்.. அதனால் இந்த மையத்தில் சிகிச்சையும் எடுத்து கொண்டு வந்திருக்கிறார்.. இந்த சமயத்தில், சிறுமி பாத்ரூமுக்குள் சென்றுள்ளார்... இதை பார்த்த மற்றொரு கொரோனா பாதித்த நோயாளி பின்னாடியே சென்று, அந்த பாத்ரூமிலேயே கற்பழித்து உள்ளார். அவருக்கு வெறும் 19 வயசுதானாம்.
இவர்கள் இருவருமே குடிசை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.. குடிசை பகுதி என்பதால் தொற்று எளிதாக பரவியிருக்கிறது போலும்.. அதனால் 2 பேருமே தங்கள் தங்கள் சொந்தக்காரர்களுடன் இதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பாத்ரூமில் தனக்கு ஏற்பட்ட நிலைமை பற்றி உறவினர்களிடம் சொல்லி சிறுமி அழுதிருக்கிறார்.. இதில் இன்னொரு கூட்டாளிக்கும் தொடர்பு இருந்துள்ளது.. இதையடுத்துதான் இந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்து ஜெயிலில் தூக்கி வைத்துள்ளனர்.
இப்போதெல்லாம் கொரோனாவைவிட, இந்த காமூகன்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை.. 4 நாளைக்கு முன்புகூட, கொரோனா மையத்தில் ஒருவர், தொற்று பாதித்த 40 வயசு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.. அதேபோல, தொற்று இருக்கிறதா என்று செக் செய்கிறேன் என சொல்லி, 14 வயது சிறுவனின் டிரஸ்ஸை கழட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் ஒருவர்.. ஆனால் அவர் வெள்ளை கோட் அணிந்து கொண்டு, தன்னை ஒரு டாக்டர் என்றும் சொல்லி கொண்டாராம்.
இப்படி கொரோனா மையத்திலேயே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.. நேற்றுகூட, உபியின் அலிகார் நகரில் உள்ள தீன்தயாள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் நோயாளியை டாக்டர் ஒருவர் கற்பழித்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம்? சில தனிமைப்படுத்தப்படும் முகாம்கள் வீடுகள் போல இருக்கிறது என்று பரவலாக சொல்லப்படுகிறது.
நோயாளிகள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு தனி தனி ரூம்கள் போல ஒதுக்கப்பட்டுள்ளது.. இதைதான் இந்த காமுகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.. கொரோனா சிகிச்சை மையங்களிலும் சரி, முகாம்களிலும் சரி, தீவிர கண்காணிப்பு தேவைப்படுகிறது.. சிசிடிவி போன்றவைகளை பொருத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications