நாடாளுமன்றத்தில் இதெல்லாம் சாதாரணமப்பா.. எம்பிக்கள் சஸ்பெண்ட்டில் ரெக்கார்ட் செய்த 1987, 2019 அமர்வு
டெல்லி: நாடாளுமன்றத்தில் இருந்து தற்போது 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இதனை விட கடந்த 1987 மற்றும் 2019 அமர்வுகளில் ஒரே ஆண்டில் அதிகபட்சமாக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் துவங்கியது முதல் தற்போது வரை தொடர்ச்சியாக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் முறையாக விவாதங்கள் நடைபெறவில்லை.
விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருவதால் தொடர்ந்து அமளி ஏற்பட்டு சபை நடவடிக்கை முடங்கியுள்ளன.

27 எம்பிக்கள் சஸ்பெண்ட்
எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் லோக்சபா, ராஜ்யசபாவில் சபையின் மையப்பகுதிக்கு சென்று தொடர்ந்து தங்கள் கோரிக்கையையை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் தற்போது வரை 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சிபிஐ, சிபிஎம், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் அடங்குவர். இவர்கள் தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிடக்ககோரி நாடாளுமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 50 மணிநேரத்தை கடந்து தொடர்ந்து வருகிறது.

1989ல் ரெக்கார்ட் செய்த சஸ்பெண்ட்
இந்நிலையில் கடந்த 32 ஆண்டு வரலாற்றை பார்த்தால் ஒரே அமர்வில் அதிக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்த ஆண்டாக 1989 உள்ளது. இந்த ஆண்டு நடந்த சட்டசபையில் மொத்தம் 63 லோக்சபா எம்பிக்கள் ஒரே நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை தொடர்பான தக்கர் கமிஷன் அறிக்கைக்கு எதிரான பலத்த எதிர்ப்புகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆந்திரா எம்பிக்கள்
மேலும் கடந்த 12 ஆண்டுகள் அடிப்படையில் பார்த்தால் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா விவகாரத்தில் 2010 மார்ச்சில் நடந்த கூட்டத்தில் 7 ராஜ்யசபா எம்பிக்களை ஹமிது அன்சாரி சஸ்பெண்ட் செய்தார். 2012 ஏப்ரலில் லோக்சபாவில் 8 காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆந்திராவின் ஒருபகுதியாக இருந்த தெலங்கானா எம்பிக்கள் மாநில உரிமை தொடர்பான பிரச்சனையில் கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2013 ஆகஸ்ட் அமர்வில் தெலுங்கானா மாநிலம் உருவாக்கம் தொடர்பாக பிரச்சனை இரு அவைகளிலும் எதிரொலித்தது. இதையடுத்து ஆந்திராவை சேர்ந்த 12 லோக்சபா எம்பிக்களை சபாநாயகர் மீரா குமார் சஸ்பெண்ட் செய்தார். 2014 பிப்ரவரியில் நடந்த கூட்டத்தொடரில் தெலங்கானா விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமளி ஏற்பட்டது. பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆந்திராவை சேர்ந்த 18 மக்களவை எம்பிக்கள் சபாநாயகர் மீரா குமாரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதிமுக எம்பிக்கள் மீது நடவடிக்கை
2015 ஆகஸ்டில் சபை நடவடிக்கையை முடக்கியதாக கூறி லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 25 காங்கிரஸ் எம்பிக்கள் 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்தார். லலித் மோடி மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வியாபம் ஊழல் விவகாரத்தில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2019 ஜனவரியில் நடந்த கூட்டத்தொடரில் லோக்சபாவில்அதிமுக, தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் 45 பேர் 2 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதான் சமீபத்தில் ஒரு சீசனில் செய்யப்பட்ட எம்பிக்களின் அதிகபட்சம நடவடிக்கையாகும். காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தியதால் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விவசாய சட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட்
2020 செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் 8 ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விவசாய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையை முடக்கியதாக கூறி ஒருவாரம் சஸ்பெண்ட் நடவடிக்கையை சபையின் தலைவர் வெங்கையா நாயுடு எடுத்தார்.
2021 நவம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரில் 12 ராஜ்யசபா எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விவசாய சட்டம் தொடர்பான விவாதத்தில் பாதுகாவலர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications