Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்தரங்கம்".. மோசமான வர்ணனை.. சிக்கிய 17 வயது சிறுவன்.. செல்போனை வாங்கி பார்த்தால்.. அதிர்ந்த போலீஸ்

14 வயது சிறுமியின் போட்டோக்களை வைத்து மிரட்டிய சிறுவன் கைதாகி உள்ளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 17 வயது சிறுவன், பல பெண்களின் அந்தரங்க போட்டோக்களை பெற்று, அவர்களுக்கே தெரியாமல் அதை ஷேர் செய்ததுடன், இன்ஸ்டாகிராமில் மிரட்டியும் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு பயன்படுகிறதோ, அதே அளவுக்கு சிலர் அதனை தவறாகவும் பயன்படுத்துகிறார்கள்.. அதனால், இந்த டிஜிட்டல் மீடியாவை இருபக்க கூர்மையான கத்தி போலதான் பயன்படுத்த வேண்டி உள்ளது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் பதிவிடப்படும் போட்டோக்கள், மற்றும் சுயவிவரங்களையும் வைத்துக்கொண்டு சிலர் மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஷேரிங்

ஷேரிங்

இது தொடர்பாக வரும் புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதுடன், சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்து வருகிறார்கள்.. அத்துடன், பொதுமக்களுக்கும் அடிக்கடி விழிப்புணர்வை தந்து, எச்சரித்தும் வருகிறார்கள்.. குறிப்பாக, பெண்கள், சமூக ஊடகங்களில் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், படங்களை பகிர வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்தபடியே உள்ளனர்.. அப்படி இருந்தும், இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.. இன்று ஒரே நாளில் 2 விதமான சம்பவங்கள் நடந்துள்ளன.. சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், அம்மாபேட்டை மகளிர் போலீசில் ஒரு புகார் மனு தந்துள்ளார்.

ஆபாச வர்ணனை

ஆபாச வர்ணனை

அந்த மனுவில், ''நான் என் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன். அதை மர்ம நபர்கள் திருடி, ஆபாச வர்ணனைகளுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.. அந்தப் போட்டோக்களை என் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. இதனால் என் குடும்பத்தினரும் நானும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. இது தொடர்பாக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல இன்னொரு அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

அந்தரங்கம்

அந்தரங்கம்

14 வயது மகள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார்.. அப்போது, 17 வயது சிறுவன், சிறுமிக்கு அறிமுகமாகி உள்ளான்.. அந்த சிறுவனுக்கு தன்னுடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் சிறுமி ஷேர் செய்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், அந்த போட்டோக்கள் அடுத்த சில நாட்களில் தவறாகவும் சித்தரிக்கப்பட்டு, சோஷியல் மீடியாவில் பரப்பப்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில், அந்த அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவேன் என்று சிறுவன், சிறுமியை மிரட்டினானாம். இதனால் பயந்துபோன சிறுமி, நடந்த சம்பவங்களை தன்னுடைய அப்பாவிடம் வந்து சொல்லி அழுதிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை, போலீசில் புகார் தந்துள்ளார்.

ஐபி அட்ரஸ்

ஐபி அட்ரஸ்

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் களமிறங்கினர்.. குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளத்தை அறிய ஐபி அட்ரஸ் மற்றும் செல்போன் நம்பரை கண்காணித்தனர்... இறுதியில் குற்றவாளியான அந்த சிறுவனின் அடையாளத்தையும் கண்டுபிடித்தனர்.. நேரடியாக அந்த சிறுவனின் வீட்டுக்கு வந்தனர். ஆனால் சிறுவன் அப்போது வீட்டில் இல்லை.. அதனால், மகனை ஸ்டேஷனில் ஆஜர்படுத்தும்படி அவரது அப்பாவுக்கு போலீசார் உத்தரவிட்டு சென்றனர்.. அதன்படியே, சிறுவனை அவரது தந்தை, போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்படுத்தினார்..

தூண்டில் மீன்

தூண்டில் மீன்

சிறுவனிடம் போலீசார் விசாரித்தபோது, சிறுவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான்... கடந்த வருடம்தான், இந்த சிறுவன் +2 படித்து தேர்ச்சி பெற்றுள்ளான்.. இப்போதுதான், காலேஜ் முதலாம் வருடம் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.. குற்றம் உறுதியானதையடுத்து, மாணவனிடமிருந்து சிம்கார்டு, செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்... அப்போதுதான், இந்த சிறுமி மட்டுமல்லாமல், பல்வேறு பெண்களும் சிறுவனால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து போலீசார் திகைத்து போயுள்ளனர்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+