பாஜவில் இணைந்தால் ரூ.20 கோடி.. ஆம் ஆத்மி டெல்லி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம்? பரபர குற்றச்சாட்டு
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் ரூ.20 கோடி வழங்குவதாக வழங்கப்படுவதாக பேரம் பேசப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கெனவே டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த எம்.பி சஞ்சய் சிங், "மற்ற மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்ததை போல டெல்லியில் கவிழ்க்க முடியாது" என கூறியுள்ளார்.

மதுபான கொள்கை
டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இந்த புகாரை டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் சில அரசு அதிகாரிகள் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றச்சாட்டு
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் கடந்த மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.

சிபிஐ ரெய்டு
இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனையை மேற்கொண்டது. இதன் பின்னர் பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால், "சிசோடியாவுடன் நானும் கூட சில நாட்களில் போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்படலாம்" என்று கூறியிருந்தார். அதேபோல இந்த அரசை கவிழ்க்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மறுப்பு
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தாங்கள் வந்து பாஜவில் இணைந்தால் ரூ.20 கோடி தருவதாகவும், மற்றவர்களை இணைத்தால் ரூ.25 கோடி தருவதாக பாஜக தங்களிடம் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த 5 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. மணீஷ் சிசோடியா மீது சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களை திசை திருப்பவே ஆம் ஆத்மி இம்மாதிரி கூறுவதாக தெரிவித்துள்ளது.

சோதனை வெற்றியடையவில்லை
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, டெல்லி அரசை வீழ்த்துவதற்கு மத்திய புலனாய்வு அமைப்புகளை எப்படி பயன்படுத்துகிறது என்பதை அம்பலப்படுத்துவேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங் கூறியுள்ளார். மேலும், "ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை உடைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாகதான் சிபிஐ சோதனை சிசோடியா மீது தொடங்கப்பட்டது. ஆனால் அது வெற்றியடையவில்லை" என்றும் கூறியுள்ளார்.

கடைசி வரைக்கும் மெயின் பிக்சர் இல்லை
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, கெஜ்ரிவால் கட்சி தொடர்ந்து டிரெய்லர்களை வெளியிடுகிறது, ஆனால் திரைப்படத்தை இன்னும் வெளியிடவில்லை என்று கூறியுள்ளது. மேலும், "இந்த குற்றச்சாட்டு தொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக ஆம் ஆத்மி கூறுகிறது. ஆனால் இந்த ஆதாரங்களை அவர்கள் ஒருபோதும் வெளியிடவில்லை. அதை அவர்கள் வெளியிடவும் மாட்டார்கள்" என்றும் அவர் கூறியுள்ளார்.
துணை முதலமைச்சர் வீட்டிர் சிபிஐ ரெய்டு, வழக்குப்பதிவு, கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் என டெல்லியில் தொடர்ந்து அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications