தகுதி நீக்கனும்.. ரவீந்திரநாத் எம்பிக்கு தங்க தமிழ் செல்வனால் புது சிக்கல்! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் எம்பியின் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையே ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி தங்க தமிழ்செல்வன் தொடர்ந்த இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதால் தற்போது அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத். இவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓபி ரவீந்திரநாத் 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 ஓட்டுகள் பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட் ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 4 லட்சத்து 28 ஆயிரத்து 120 ஓட்டுகள் பெற்ற நிலையில் 76,693 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழ் செல்வன் (இப்போது திமுகவில் உள்ளார்) போட்டியிட்டு 1 லட்சத்து 44 ஆயிரத்து 50 ஓட்டுகள் பெற்று 3வது இடம் பிடித்தது.
இந்நிலையில் தான் ஓபி ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில் சொத்து விபரம், வருமானங்களை மறைத்துள்ளார். இவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேனி நாடாளுமன்ற தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓபி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கியது.
இது ஓபி ரவீந்திரநாத்துக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அதோடு மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ரவீந்திரநாத் எம்பி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓபி ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் ஓபி ரவீந்திரநாத் நிம்மதி பெருமூச்சு விட்டார். அதோடு அவர் எம்பியாக தொடர்ந்து வருகிறார். இதற்கிடையே தான் 2019 தேர்தலில் தோல்வியடைந்த தங்க தமிழ் செல்வன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு செய்யப்பட்டது.
அதில், ‛‛தேர்தல் வேட்புமனுவில் சொத்து விபரம் உள்ளிட்ட உண்மைகளை மறைத்த ஓபி ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என அறிவித்தால் மட்டும் போதாது. அவர் செய்தது கிரிமினல் குற்றம். இதனால்அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதோடு அடுத்த 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு என்பது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் விவகாரம் காரணமாக இந்த மனு செய்யப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றம் விசாரிக்க மறுத்தது. இந்த வேளையில் தங்க தமிழ் செல்வன் தரப்பு, ‛‛இது அரசியல் விவகாரம் தொடர்பான வழக்கு அல்ல. இது தேர்தல் வழக்கு, சொத்து விபரம் மற்றும் வருமான விஷயங்களை ரவீந்திரநாத் எம்பி மறைத்துள்ளார். இதனால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்'' என வாதிட்டார்.
இதையடுத்து நீதிமன்றம் இந்த மனுவை வழக்காக ஏற்றுக்கொண்டது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனக்கூறி ரவீந்திரநாத் எம்பிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதோடு ஏற்கனவே ரவீந்திரநாத் எம்பியின் வெற்றி செல்லாது என உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் அந்த வழக்கோடு சேர்த்து இதுவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications