ஸ்பெக்ட்ரம் 2 ஜி வழக்கு: ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் 2 ஜி வழக்கில் திமுக எம்பியும் முன்னாள் மத்டிய அமைச்சருமான ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவையும் பதில் மனுத் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
2ஜி ஊழல் வழக்கு என்பது இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலமாக மத்திய அரசுக்கு ரூ1,70,000 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்பது பூடகமான ஒரு குற்றச்சாட்டு. இந்த ரூ1,70,000 கோடி இழப்பு என்பதை திமுகவின் அந்நாளைய அமைச்சர் ஆ.ராசா, எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கொள்ளையடித்துவிட்டதாகவும் பொய் பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதனை வைத்துதான் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது.
ஆனால் தம் மீதான 2ஜி ஊழல் வழக்கை எதிர்கொண்டார் ஆ.ராசா. சிறைவாசம் அனுபவிக்க நேரிட்ட போதும் ஆ.ராசா தமது வழக்கில் தாமே ஆஜரானார். தமக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப் பிரிவு முன்வைத்த பூடகமான மோசடி வாதங்களை தகர்த்து எறிந்தார். இதனால் 2017-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் வழக்கில் இருந்து ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். திமுக மீதான ஆகப் பெரும் கறை அகற்றப்பட்டது. அதனால்தான் ஆ.ராசா சிறையில் இருந்து விடுதலையான போது தகத்தகாய சூரியன் என போற்றினார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

ஆனால் ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகிய அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22, 23 தேதிகளில் நடைபெற உள்ளது.

-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications