3 ஆண்டு சிறை + ரூ.1 கோடி ஃபைன்.. இனி ஆன்லைன் கேமில் வென்றாலும் பணம் கிடையாது.. மசோதாவின் பின்னணி
டெல்லி: ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் கேம்களை கட்டுப்படுத்தி தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய மசோதாவை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்துள்ளது. அந்த மசோதாவின்படி பணம் கட்டி ஆன்லைன் கேம்களை அறிமுகம் செய்வோர், அதனை ப்ரோமோஷன் செய்வோருக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரம்வெளியாகி உள்ளது.
தற்போது பலரும் ஆன்லைன் கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் இன்டர்நெட் உதவியுடன் பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் கேம் விளையாடுகிறார்கள். அதேவேவளையில் இன்னொரு தரப்பினரோ அதிர்ஷ்டத்தை நம்பி பணம் கட்டி கேம் விளையாடி வருகின்றனர். குறிப்பாக ஆன்லைன் ‛பெட்டிங் கேம்'களை விளையாடி பணத்தை இழக்கின்றனர். பலரும் தற்கொலையும் செய்துள்ளனர்.

இந்நிலையில் தான் ஆன்லைன் ‛பெட்டிங் கேம்'களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் செயலிகளை கட்டுப்படுத்த மத்திய அரசு மசோதா அறிமுகம் செய்துள்ளது.
Promotion & Regulation of Online Gaming Bill 2025 என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மசோதாவை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று லோக்சபாவில் அறிமுகம் செய்தார். இந்த மசோதாவை தமிழில் ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு மசோதா 2025 எனலாம். இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் விளையாட்டுகளில் மக்கள் ஏமாறாமல் தடுப்பது தான்.
அதாவது இ-ஸ்போர்ட்ஸ், கல்வி மற்றும் சமூக விளையாட்டுகளை ஊக்குவித்து ஒழுங்குபடுத்துவது. ஆன்லைனின் பணம் செலுத்தி சூதாட்டமாக இருக்கும் ஒரு கேமை முழுமையாக தடை செய்வது தான் இதன் நோக்கமாகும். அதன்படி இ-ஸ்போர்ட்ஸ், கல்வி மற்றும் சமூக விளையாட்டுகள் முறைப்படி அனுமதிக்கப்படுகிறது. அதேவேளையில் ரம்மி, போக்கர், பெட்டிங் உள்பட பிற பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளுக்கு இந்த மசோதா தடை விதிக்கிறது.
அதாவது பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளில் வங்கி கணக்கை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை ரத்தாக உள்ளது. இதன்மூலமாக பணம் செலுத்த முடியாது. இதன்மூலம் அந்த செயலிகளுக்கு தடை விழுகிறது. பிற கேமிங்களில் வெற்றி பெறுவோருக்கு பணமாக பரிசு வழங்க முடியாது. அதற்கு பதிலாக பிற வடிவிலான பரிசு, டிராபி, சான்றிதழ்கள் வழங்க இந்த மசோதா வழிவகுத்து கொடுக்கிறது.
மாறாக ஆன்லைன் பணவிளையாட்டுகளை நடத்துவோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு கோடி ரூபாய் வரை அபராதம், அல்லது இரண்டும் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆன்லைன் பண விளையாட்டுகளை விளம்பரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை அல்லது ஐம்பது லட்சம் ரூபாய் அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.
அதேபோல் வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்கள் ஆன்லைன் பணவிளையாட்டுகளுக்கான பரிவர்த்தனைகளுக்கு உதவினாலும், மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர் குற்றங்களுக்கு, தண்டனை இன்னும் கடுமையாக்கப்பட்டு, அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications