3 வயசுதான்! இரத்த கறை.. ஓடிவந்த பிஞ்சு குழந்தை! பள்ளிக்குள்ளே ‘டிஜிட்டல் பலாத்காரம்’! அப்டினா என்ன?
டெல்லி : டெல்லி பள்ளிக்குள்ளேயே வைத்து 5வயது சிறுமி ஒருவர் டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இது போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தான் ஓடும் காரில் இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லி அருகே மீண்டும் நடந்ததுள்ள ஒரு சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

போலீசில் புகார்
கிரேட்டர் நொய்டா வெஸ்டில் 3 வயது சிறுமியை டிஜிட்டல் பலாத்காரம் செய்ததாக உள்ளூர் காவல் நிலையத்துக்கு சமீபத்தில் புகார் வந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தி சந்தேக நபர்களை கண்டுபிடிக்க போலீசார் இரண்டு குழுக்களை அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் அதிர்ச்சி
3 வயது சிறுமிக்கு ரத்தம் கசிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், பலாத்காரம் அல்லது பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரம் இல்லை என்றாலும், அவரது பிறப்புறுப்பில் காயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பின்னர் தான் பள்ளியில் யாரோ சிறுமியை தனியாக அழைத்துச் சென்று டிஜிட்டல் முறையில் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு பெற்றோர்கள் குவிந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஜிட்டல் பலாத்காரம் என்றால் என்ன?
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது டிஜிட்டல் பலாத்காரம் என்ன என்பது குறித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆங்கிலத்தில் டிஜிட் என்றால் கை, கால் விரல்களை குறிக்கிறது. அதாவது ஒருவரது அந்தரங்க உறுப்புகளுக்குள் ஒருவரின் அனுமதி இன்றி வலுக்கட்டாயமாக விரல்கள் அல்லது கால் விரல்களை நுழைப்பதை டிஜின் என்றும் டிஜிட்டல் பலாத்காரம் என்று அழைக்கப்படுகிறது.

என்ன தண்டனை?
இத்தகைய டிஜிட்டல் பலாத்காரத்தை செய்த குற்றவாளிக்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் அல்லது பத்தாண்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2012 வரை, "டிஜிட்டல் கற்பழிப்பு" பாலியல் பலாத்காரம் என வகைப்படுத்தப்படவில்லை. 2012 ஆம் ஆண்டு நடந்த கொடூரமான நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கிற்குப் பிறகு புதிய கற்பழிப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு நூற்றுக்கணக்கான வழக்குகள் இந்தியாவில் பதியப்பட்டுள்ளது.
-
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications