டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லா குறிச்சு வச்சுக்கங்க.. அறிவித்தது ரூ.20 லட்சம் கோடி இல்லை.. ரூ.1,86,650 கோடிதான்.. ப.சிதம்பரம்

அறிவித்தது வெறும் ரூ.1,86,650 கோடிதான் என்று ப.சிதம்பரம் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: "இந்த நம்பரை ஞாபகம் வெச்சுக்குங்க.. அறிவித்தது ரூ 20 லட்சம் கோடி இல்லை.. வெறும் ரூ 1,86,650 கோடி தான்... இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்" என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் தொங்கிவிட்டது.. அதனால் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் வரையிலான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

4.0 lockdown: p chidambaram criticized finance minsiters economic package

5 கட்டமாக இந்த நிதி அறிவிக்கப்பட்டது.. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிதி, உணவு அறிவிக்கப்பட்டன.. அதேபோல, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்க, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி, விவசாய உள்கட்டமைப்புக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என பல பல அறிவிப்புகள் வெளியாகின.

"நிதியமைச்சர் அறிவித்த இந்த சலுகைகள், சீர்திருத்தங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.. தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும்.. பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவும்.. கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும்.. மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும்" என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

அதேசமயம், ஏழைகளுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் இந்த நிதி அறிவிப்பினால் மக்களுக்கு நேரடியாக எந்த பலனும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றன. நிதியமைச்சரின் இந்த அறிவிப்புகள் மிகப்பெரிய விவாத சூழலை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத் தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில் அவர் சொல்லி உள்ளதாவது:

4.0 lockdown: p chidambaram criticized finance minsiters economic package

"பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆதரவும், எதிர்ப்புமாக கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

English summary
4.0 lockdown: p chidambaram criticized finance minsiters economic package
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X