டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 கொரோனா நோயாளிகளுக்கு.. மலக்குடல் இரத்தப்போக்கு.. ஒருவர் உயிரிழப்பு.. தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் சைட்டோமெலகோ வைரஸ் தொடர்பான மலக்குடல் இரத்தப்போக்குக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்சோ உள்ளிட்ட 9 வழக்குகளில் சிக்கிய சிவசங்கர் பாபா.. 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.. கோர்ட் உத்தரவு போக்சோ உள்ளிட்ட 9 வழக்குகளில் சிக்கிய சிவசங்கர் பாபா.. 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.. கோர்ட் உத்தரவு

கொரோனா வைரஸ் ஏற்பட்டவர்களில் இந்த பாதிப்பு ஏற்படுவது இது முதன்முறை என்றும் தொற்று கண்டறியப்பட்ட 20-30 நாட்களுக்குப் பிறகு 5 கொரோனா நோயாளிகளும் இந்த பாதிப்பை பதிவு செய்ததாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

நோய்த்தொற்று மற்றும் அதன் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் (ஸ்டெராய்டுகள் போன்றவை) நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்குகின்றன, மேலும் அவை மாறுபட்ட அறிகுறிகளுடன் அசாதாரண நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகின்றன என்று சர் கங்கா ராம் மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

80 சதவீதம் பேர்

80 சதவீதம் பேர்

இதுபோன்ற ஒரு சந்தர்ப்பவாத நோய்த்தொற்று சி.எம்.வி சைட்டோமெலகோயரஸிலிருந்து வருகிறது, இது இந்திய மக்கள்தொகையில் 80 முதல் 90 சதவிகிதம் வரை அறிகுறியற்ற வடிவத்தில் உள்ளது, ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவ ரீதியாக அறிகுறியற்றதாக மாறும் அளவுக்கு வலுவாக உள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மலக்குடல் இரத்தபோக்கு

மலக்குடல் இரத்தபோக்கு

30-70 வயதிற்கு உட்பட்ட இந்த நோயாளிகள் டெல்லி-என்.சி.ஆரைச் சேர்ந்தவர்கள், அவர்களில் நான்கு பேருக்கு குறைந்த இரைப்பை குடல் இரத்தப்போக்கு ஏற்பட்டது. இது மலத்தில் இரத்தப்போக்கு ஏற்பட வழிவகை செய்துள்ளது. இவர்களில் இருவருக்கு பெருங்குடலின் வலது பக்கத்தை அகற்றும் வடிவத்தில் அவசரகால உயிர் காக்கும் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

வெற்றிகரமான சிகிச்சை

வெற்றிகரமான சிகிச்சை

இந்த 2 பேரில் ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மற்ற மூன்று நோயாளிகளுக்கும் கான்சிக்ளோவிர் மூலம் வைரஸ் தடுப்பு சிகிச்சை மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்று மருத்துவமனையின் டாக்டர் அரோரா தெரிவித்தார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில ஆரம்பகால நோயறிதல் மற்றும் பயனுள்ள வைரஸ் தடுப்பு சிகிச்சையின் மூலம் பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவமனையின் இரைப்பைக் குடலியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் பிரவீன் சர்மா தெரிவித்தார்.

English summary
5 corona patients underwent rectal bleeding at Sir Ganga Ram Hospital in Delhi. One of them died
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X