மெகா ட்விஸ்ட்! பாஜக கூட்டணியை முறித்த நிதிஷ்.. மணிப்பூரில் ஜேடியு கட்சியையே கூண்டோடு தூக்கிய பாஜக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறிய நிலையில், இப்போது நிதிஷ் எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர்.

பீகார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யாருமே எதிர்பார்க்காத வகையில் பல ட்விஸ்டங்கள் அரங்கேறியது. பீகாரில் இருந்த பாஜக கூட்டணி அரசு கவிழ்ந்தது.

பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியைப் பிடித்து வந்த நிலையில், பீகாரில் அது அவர்களுக்கு நடந்தது ஷாக் தான்.

பீகார்

பீகார்

கடந்த 2020 நடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி 75 இடங்களையும் பாஜக 74 இடங்களிலும் வென்று இருந்தது. நிதிஷ் குமாரின் ஜேடியு 43 இடங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும், நிதிஷ்குமார் முதல்வராகத் தொடர்ந்த நிலையில், பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து. இருப்பினும், சில ஆண்டுகளிலேயே இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படத் தொடங்கியது.

 கூட்டணி

கூட்டணி

இது ஒரு கட்டத்தில் எல்லை மீறிப் போகவே, யாரும் எதிர்பாராத விதமாக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார். தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் அசுர பலத்தில் ஆட்சியை அமைத்தார் நிதிஷ்குமார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாஜக அமைதியாகவே இருந்தது. இந்நிலையில், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், பாஜக நறுக் பதிலடி கொடுத்துள்ளது.

 மணிப்பூர்

மணிப்பூர்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்துள்ளது பாஜக. அங்கு நிதிஷ்குமார் கட்சியில் இருந்த 7 எம்எல்ஏக்களில் ஐந்து பேர் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர். பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்த சில வாரங்களிலேயே இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

செல்லும்

செல்லும்

இது தொடர்பாக மணிப்பூர் சட்டமன்ற செயலாளரின் அறிக்கையில், "ஐந்து ஜே.டி.யு எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் இணைந்ததைச் சபாநாயகர் ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார். கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமாக இருந்ததால், அவர்கள் கட்சி மாறியது செல்லுபடியாகும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

 மணிப்பூரில் ஜேடியு

மணிப்பூரில் ஜேடியு

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேடியு 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் வென்ற எம்எல்ஏக்கள் கே ஜாய்கிஷன், என் சனேட், எம்டி அச்சாப் உதின், முன்னாள் டிஜிபி எல்எம் காடே மற்றும் தங்கம் அருண்குமார் ஆகியோர் இப்போது பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் இப்போது பாஜக தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+