5 மாநில தேர்தல் முடிஞ்சாச்சு.. அடுத்து கூடுகிறது நாடாளுமன்றம்.. அகஸ்டா கவலையில் காங்.!
டெல்லி: ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பெரிதும் எதிரொலிக்காத அகஸ்டா வெஸ்ட் லேண்ட் விவகாரம், வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரிதும் புயலை கிளப்பும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சி மீதான கோபம், வசுந்தரா ராஜே மீதான அதிருப்தி உள்ளிட்ட காரணிகள் வெற்றியை தம் பக்கம் கொண்டு வந்து சேர்க்கும் என்று காங்கிரஸ் திடமாக நம்புகிறது.

அதே நேரத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டு, டெல்லி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ கஸ்டடியில் உள்ளார். 5 நாள் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் அனுப்பிய நிலையில் தேர்தலில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் விவகாரம் பாஜகவுக்கு எதிர் பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறினர்.
தேர்தல், வாக்குப்பதிவு என தப்பி பிழைத்த காங்கிரசுக்கு வரவிருக்கும் நாடாளு மன்ற கூட்டத் தொடர் கடும் சவாலாக விளங்கும் என்று தெரிகிறது. கூட்டத் தொடரில் இந்த விவகாரம் முன் வைக்கப்பட்டால் எந்த மாதிரியான பதிலையோ அல்லது விமர்சனத்தையோ முன் வைப்பது என்று தெரியாமல் உள்ளது.
சோனியா காந்தி குடும்பத்துக்கும், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரத்துக்கும் உள்ள தொடர்பு, மைக்கேலின் பங்களிப்பு குறித்து அவையில் காரசார விவாதம் முன் வைக்கப்பட்டால் எப்படி அதனை எதிர்கொள்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் ராமர் கோயில் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றை முன் வைத்து பாஜகவுக்கு நெருக்கடி தரலாம் என்றும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, போபர்ஸ் விவகாரத்தில் கையை சுட்டுக் கொண்ட காங்கிரசுக்கு 5 மாநில தேர்தலை தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications