நாடு முழுவதும் 68 உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு - கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 4 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 4 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக் ஆகியோர் நீதிபதிகளாகின்றனர். நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் குழு, கடந்த ஒன்றாம் தேதி கூடி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியது. இதில் 112 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில், சென்னை, அலகாபாத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 12 உயர் நீதிமன்றங்களில் 68 நீதிபதிகளை நியமிப்பதற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

68 High Court Judges Across the Nation - The Collegium Committee recommended to the Central Government

வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 9 பேரின் பெயர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அவர்கள் சில நாட்களுக்கு முன் பதவியேற்ற நிலையில், உயர்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் 24 பேர் நீதிபதி பணியில் உள்ளனர். 44 பேர் வழக்கறிஞர்கள் ஆவர். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வரும் சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக் ஆகிய நான்கு பேரை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான உத்தரவை விரைவில் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+