75-வது சுதந்திர தினம்.. ஆகஸ்ட் முதல் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை!
டெல்லி : நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொடி, பொதுமக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேரும் வகையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அனைத்து தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திர தினம் 'ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்' என்ற பெயரில் (சுதந்திர தின அமுத பெருவிழா) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு 'ஹர் கார் திரங்கா' (வீடுதோறும் மூவர்ணக்கொடி) என்ற இயக்கத்தை அறிவித்தது. இதன்படி, ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள 'ஹர் கார் திரங்கா' என்ற வீடுதோறும் மூவர்ணம் இயக்கம் மற்றும் கொரோனா தடுப்பூசி தொடர்பான 75 நாள் பிரசாரம் குறித்து, மத்திய அரசின் கலாசாரத்துறை செயலாளர் கோவிந்த் மோகன், மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளர் அபூர்வ சந்திரா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியவதாவது : நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கும் உலகத்திலேயே மிகப்பெரிய நிகழ்வாக, 'ஹர் கார் திரங்கா' (வீடு தோறும் மூவர்ணம்) நடத்தப்பட உள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், அதிக அளவில் கொடி வினியோகம் செய்யும் நிறுவனங்களை மத்திய ஜவுளித் துறை கண்டறிந்துள்ளது.
ஆகஸ்ட் 1-ந் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் தபால் நிலையங்களிலும் தேசியக் கொடியை மக்கள் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம். இந்தியாவில் முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி இயக்கம் ஜூலை 15-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 75 நாட்கள் நடத்தப்படுகிறது. கொரோனாவை எப்படி வெற்றிகொள்ள முடியும்? என்பதை பிரசாரமாக செய்து வருகிறோம் என்று மத்திய கலாசாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நமது தேசியக்கொடியை, சூரிய உதயத்தில் இருந்து பறக்க விடலாம், சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக இறக்கி விட வேண்டும் என்பதுதான் சட்ட நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டதால், வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எந்திரத்தால் செய்த தேசியக்கொடிக்கும், பாலியஸ்டர் தேசியக்கொடிக்கும் அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications