இந்தியாவில் மொத்தம் 96.88 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் தகவல்! உலகிலேயே இந்த பெருமை நமக்குத்தான்
டெல்லி: இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் 49.72 கோடி; பெண் வாக்காளர்கள் 47.15 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 48 ஆயிரத்து 44 பேர் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தவர்களை விட வரும் லோக்சபா தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதாவது, கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது, இந்தியாவில் 89.6 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர்கள் எண்ணிக்கை, சுமார் 7 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.

மேலும், புதிதாக பதிவு செய்துள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முதல் முறையாக வரும் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 88 லட்சத்துக்கு 35 ஆயிரம் பேர் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications