Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விட்டுக்கொடுக்காத டி.கே.சிவகுமார்.. டஃப் கொடுக்கும் சித்தராமையா! முதல்வர் யார்? இன்று காலை முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெங்களூரு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை மாநிலத்தின் முதலமைச்சர் அறிவிக்கப்படவில்லை. இதற்கு காரணம் டி.கே.சிவகுமார்vsசித்தராமையா மோதல்தான். இந்நிலையில் முதலமைச்சர் குறித்து இறுதி முடிவை இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டிருந்தன. ஆனால் இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது. ஆனால் அடுத்த ஆண்டே இந்த கூட்டணியிலிருந்த சுமார் 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவ ஆட்சி கவிழ்ந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

A final decision on who will be the next Chief Minister of Karnataka is expected to be taken this morning

இந்த சமயத்தில் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றவர்தான் டி.கே.சிவகுமார். இவர் இந்த பொறுப்புக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி ஓரளவு நெருக்கடியிலிருந்து தப்பித்து. இதனையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. இந்த தேர்தல் வெற்றிக்கு டி.கே.சிவகுமாரின் பங்கும் அளப்பரியது என்று சொல்லப்படுகிறது. அதாவது வழக்கமாக ஒக்கலிகர் சமூகத்தினரின் வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்குதான் செல்லும்.

ஆனால் இந்த சமூகத்தின் தலைவராக உள்ள சிவகுமார் இந்த வாக்குகளை சாதுர்யமாக காங்கிரஸ் கட்சிக்கு மடைமாற்றம் செய்திருக்கிறார். பழைய மைசூர் பகுதியில் நின்று காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றது இப்படிதான். ஆக டி.கே.சிவகுமாரை கட்சி மேலிடம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. அதுமட்டுமல்லாமல் கட்சி கொடுத்த அத்தனை உத்தரவுகளையும் சிவகுமார் சரியாக நிறைவேற்றி வந்திருக்கிறார். எனவே இவருடைய கோரிக்கைக்கு கட்சி மேலிடம் செவி சாய்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

மறுபுறம் சித்தராமையாவும் இந்த முதலமைச்சர் ரேஸில் இருக்கிறார். இவர் சிவகுமாரை விட வயதிலும், அரசியலிலும் மூத்தவர். தற்போது வரை 45 ஆண்டுகளாக எம்எல்ஏவாக தேர்வாகி பணியாற்றியுள்ளார். எனவே இவருக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்களிடம் ஆதரவு இருக்கிறது. இந்த ஆதரவை வைத்துதான் அவர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். ஆக இப்படியாக இரண்டு முக்கிய புள்ளிகளும் முதலமைச்சர் கோரிக்கையை வைத்திருப்பதால் யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்று தெரியாமல் கட்சி விழிபிதுங்கி நிற்கிறது.

முன்னதாக இது குறித்து இருவரையும் தனித்தனியே அழைத்து கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார். நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சித்தராமையா முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. டி.கே.சிவகுமாரை பொறுத்த அளவில் ஆட்சியை 2.5 ஆண்டுகளாக இரண்டாக பிரித்து கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதில் முதல் 2.5 ஆண்டுகள் தனக்குதான் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை தனக்கு முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லையெனில் துணை முதலமைச்சர், நிதியமைச்சர் என எந்த பொறுப்பும் வேண்டாம் என்றும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மற்றும் ஒது சாதாரண எம்எல்ஏவாகவும் இருந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதில்தான் சிக்கல் இருக்கிறது. ஒருவேளை இவருக்கு பதவி கொடுக்கவில்லையெனில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் சார்த்த ஒக்கலிகர் சமூகத்தினர் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு கிடைப்பது கேள்விக்குறியாகிவிடும்.

எனவே இருவரின் கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட மல்லிகர்ஜுன கார்கே இன்று காலை 11 மணிக்கு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதில் யார் அடுத்த முதலமைச்சர் என்பது இறுதி செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+