28 மனைவிகள் முன்னிலையில் 37 வது திருமணம் செய்த தாத்தா.. விரக்தியான 90 கிட்ஸ்.. காண்டான 2k கிட்ஸ்!
டெல்லி: 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'' என்பார்கள். ''இந்த டயலாக் உண்மையாணே'' என்று திருமணம் முடித்தவர்களிடம் கேட்டு பாருங்கள்.
நீங்கள் கேள்வி கேட்ட பத்தில் 7 பேர் உங்களை அடிக்க பாய்ந்து வருவார்கள். '' இறைவன் கொடுத்த வரமாம். அந்த ஒரு வரத்தையும் சமாளிக்க படுறபாடு எனக்குதானே தெரியும். நீ வேற கடுப்ப கிளப்பிகிட்டு'' என்று கொதிப்பான வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.

அன்லிமிடெட் புலம்பல்
இவர்களின் கவலை இதுவென்றால் 90 கிட்ஸ்களின் கவலை இதற்கு எதிர்மாறாக இருக்கிறது. ''நேத்து பெய்ஞ்ச மழையில இன்னிக்கு முளைச்ச காளான்கள்(2k கிட்ஸ்) எல்லாம் ஒன்னுக்கு பத்து கேர்ள் பிரண்ட்ஸ்ஸோட சுத்திட்டு திரியுதுங்க.. முதல் நாள் காதல், அடுத்த நாள் காமம், மூன்றாம் நாள் காலை திருமணம்'' என்று ஜப்பான் புல்லட் ரயில் போல வேகமாக வாழ்க்கையை கொண்டு போகுதுங்க. நாமளும் இருக்கோமே'' என்று 90 கிட்ஸ்களின் கவலை அன்லிமிடெட் இன்டெர்நெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

வாய் பிளக்க வைத்த தாத்தா
இந்த நிலையில் திருமணம் முடித்தவர்கள் ஆச்சரியத்துடன் வாய் பிளக்கும் வகையிலும், 90 கிட்ஸ்களின் நெஞ்சை அடைக்கும் வகையிலும் ஒரு தாத்தா திருமணம் செய்து கொண்டு மிகப்பெரிய சரித்திரம் படைத்துள்ளார். ''ஒரு கல்யாணம் முடிப்பதில் என்னப்பா இருக்கிறது? என்று கேட்கிறீர்களா! இந்த தாத்தா முடித்தது முதல் திருமணமோ, 2-வது திருமணமோ கிடையாதுங்க.. 37-வது திருமணம்.

37-வது திருமணம்
இதுக்கே ஷாக் ஆனா எப்படி? கொஞ்சம் தண்ணிய குடிச்சிட்டு பதட்டபடாம வாசிங்க. இந்த தாத்தாவுக்கு ஏற்கனவே 28 மனைவிகள் உள்ளனர். 135 பிள்ளைகளையும், 126 பேரக்குழந்தைகளையும் லிஸ்ட்ல சேத்துக்கோங்க. இந்த நிலையில்தான் தாத்தா 37-வதாக திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதற்கு அவரது குடும்பம் பச்சைக் கொடி காட்டியது.

தாலி கட்டிய தாத்தா
அவரின் கிராமமே சாரி அந்த குடும்பமே ( 28 மனைவிகள்+135 பிள்ளைகள்+ 126 பேரக்குழந்தைகள் எல்லாம் கூட்டி பார்த்தா ஒரு குட்டி கிராமமே உள்ளே இருக்கிறது) புடை சூழ்ந்து நிற்க மனைவியின் கழுத்தில் தாலியை கட்டினார் தாத்தா. தாலி காட்டியபோது குடும்ப உறுப்பினர்கள் கோரஸாக கைதட்டியதுதான் இதில் செம பியூட்டி.

காண்டான நெட்டிசன்கள்
இந்த கல்யாணம் எங்க நடந்தது என்று சரியாக தெரியவில்லை. ஆனால் ரூபர் சர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவை பலர் பகிர்ந்து வைரலாக்கினர். தாத்தா கல்யாண வீடியோவுக்கு கீழே பல நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ''ஆமா.. 28 மனைவிகளை சமாளிக்க இவருக்கு எப்படி எனர்ஜி இருக்கிறது''(டபுள் மீனிங் இல்லைங்க) என்று ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார்.

லெஜண்ட்யா இவரு
''இவரு லெஜண்ட்யா'' கொடுத்து வச்ச மனுஷன்'' என்று சிலரும் பதிவிட்டுள்ளனர். '' நம்ம ஒன்னையே சமாளிக்க முடியலையே.. இவரு எப்படியா இருபத்தெட்டை சமாளிச்சாரு. இந்த மனுஷன கோவில் கட்டி கும்பிடனும்'' என்று சிலர் நகைச்சுவையாக கூறியுள்ளனர். ஆனா இதுல ஒரு விஷயத்துல 90 கிட்ஸ் ஆறுதல் பட்டுக்கலாம். ''அடேய் 2k கிட்ஸ்களா.. 5, 10 கேர்ள் பிரண்ட்ஸ் வச்சிட்டு எங்களையா வெறுப்பேத்தினங்க.. இப்ப உங்களையே காண்டாக்குற என் தலைவனை பாருங்கடா'' என்ற ஆறுதலான வார்த்தைகளை கூறி மனக்காயத்துக்கு கொஞ்சம் மருந்து போட்டுக்கலாம்.

எனக்கு ஒரு டவுட்டு
ஆனா இதுல என்னுடைய டவுட் என்னென்னா பொதுவா குழாயடில இரண்டு, மூணு பெண்கள் சேர்ந்தாலே கோயம்பேடு மார்க்கெட்போல கசகசனு இருக்கும்(மரியாதைக்குரிய மகளிர்கள் மன்னிக்கவும்). 28 பெண்கள் நிரம்பியிருக்கிற அந்த வீடு எப்படி இருந்துருக்கும் என்பதுதான்.












Click it and Unblock the Notifications