உ.பி. பாஜக ஆட்சியில் 6 ஆண்டுகளில் 183 என்கவுண்ட்டர்கள்.. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளில் 183 என்கவுண்ட்டர்கள் போலீசாரால் நிகழ்த்தப்பட்டுள்ளது தொடர்பாக வல்லுநர் குழு விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் என்கவுண்ட்டர்கள் சகஜமான ஒன்றாகிவிட்டது. அம்மாநில அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பலரும் என்கவுண்ட்டரால் சுட்டுக் கொல்லப்படுவது இயல்பாகிவிட்டது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 183 என்கவுண்ட்டர்கள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக கடந்த 2 மாதங்களில் வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் மட்டும் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் எம்பி அத்திக் அகமது, அவரது மகன் ஆசாத் அகமது, அத்திக் சகோதரர் அஷ்ரப் அகமது உள்ளிட்டோரின் மரணம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஆசாத் அகமது உள்ளிட்ட 2 பேரை போலீசார் ஜான்சி நகரில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அத்திக் அகமது, அஷ்ரப் அகமது இருவரும் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது இந்துத்துவா தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் உ.பி.யில் கடந்த 6 ஆண்டுகளில் 183 என்கவுண்ட்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த என்கவுண்ட்டர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications